கார்வால் கோட்டம்

From Wikipedia, the free encyclopedia

கார்வால் கோட்டம்
Remove ads

30.5°N 78.5°E / 30.5; 78.5 கார்வால் கோட்டம் (Garhwal division) IPA: /ɡəɽʋːɔɭ/) வடமேற்கு இந்தியாவின் இமயமலையின் உத்தரகண்ட் மாநிலத்தின் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்த ஒரு வருவாய் கோட்டமாகும். இதன் நிர்வாகாத் தலைமையிடம் பௌரி நகரம் ஆகும். கார்வால் மொழி பேசும் கார்வாலி இன மக்கள் கார்வால் கோட்டப் பகுதியில் அதிகம் வாழ்கின்றனர். இந்துக்களின் புனித தலங்களான சோட்டா சார் தாம், பஞ்ச கேதார தலங்கள் மற்றும் ஜோஷி மடம் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைக்கு முன்னர் வரை இப்பகுதியை கார்வால் இராச்சியத்தினர் ஆட்சி செய்தனர். பின்னர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

Thumb
உத்தரகண்ட் மாநில வருவாய் கோட்டங்கள், (மஞ்சள் நிறத்தில் கார்வால் கோட்டம்)
விரைவான உண்மைகள் நான்கு சிறு கோயில்கள் ...
Remove ads

எல்லைகள்

கார்வால் பகுதியின் வடக்கில் திபெத், கிழக்கில் குமாவுன் கோட்டம், தெற்கில் உத்தரப் பிரதேசம், வடமேற்கில் இமாசலப் பிரதேசம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

கார்வால் கோட்டத்தின் மாவட்டங்கள்

கார்வால் கோட்டத்தில் சமோலி மாவட்டம், ருத்ரபிரயாக் மாவட்டம், உத்தரகாசி மாவட்டம், அரித்துவார் மாவட்டம், டேராடூன் மாவட்டம், பௌரி கார்வால் மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம் என ஏழு மாவட்டங்கள் கொண்டது.

பெயர் காரணம்

கார்வால் பகுதி கார் எனப்படும் பல கோட்டைகள் கொண்டிருந்ததால் இப்பகுதிக்கு கார்வால் என பெயராயிற்று.

வரலாறு

Thumb
சமஸ்தானமான கார்வால் நாட்டின் கொடி
Thumb
சுகௌலி ஒப்பந்தத்தின் விளைவாக பிரித்தானிய இந்தியா மற்றும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலப்பரப்பு மாறுதல்கள்

கி பி 823இல் கனகபாலன் எனும் மன்னர் கார்வால் பகுதியின் முதல் மன்னராக விளங்கினார்.[1][2]கார்வால் நாடு, தற்கால உத்தரகண்ட் மாநிலத்தின் டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் உத்தரகாசி மாவட்டம் எனும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது. கி பி 1901-இல் கார்வால் இராச்சியம் 4180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,68,885 மக்கள் தொகையுடன் விளங்கியது. 1815-முதல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு கப்பல் செலுத்தி நாட்டை ஆண்டனர்.

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள், இந்தியாவில் தங்களது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், நேபாள இராச்சியத்த்னர், மேற்கில் உள்ள குமாவுன் இராச்சியம் மற்றும கார்வால் இராச்சியங்களை கைப்பற்றி நேபாள இராச்சியத்துடன் இணைத்த்தனர். 1814-15-களில் நடைபெற்ற 1814-1816 ஆங்கிலேய-போருக்குப் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் நேபாள இராச்சியத்தின் உயர் அதிகாரிகள் 4 மார்ச் 1816 அன்று இந்தியாவின் தற்கால பிகார் மாநிலத்தின் சுகௌலி எனும் ஊரில் வைத்து சுகௌலி உடன்படிக்கை செய்து கொண்டனர். [3]இந்த ஒப்பந்தப்படி, நேபாளிகள் கைப்பற்றிய கார்வால் இராச்சியம் மற்றும் குமாவுன் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

பின்னர் கார்வால் நாடு, பிரித்தானியா இந்தியப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் சுதேச சமஸ்தானமாக 1815 முதல் ஆகஸ்டு, 1949 முடிய விளங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசுடன் இணைந்தது.

Remove ads

புவியியல்

Thumb
இந்தியாவின் இரண்டாம் உயரமான கொடுமுடி நந்தா தேவி
Thumb
மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, கார்வால்

சிவாலிக் மலையில் அமைந்த கார்வால் ரோகில்கண்டின் ஒரு சிறு பகுதியைக் கொண்டது. மேலும் கார்வாலின் சமோலி மாவட்டத்தில் 7816 மீட்டர் உயரம் கொண்ட நந்தா தேவி, 7756 மீட்டர் உயரம் கொண்ட காமேத், 7138 மீட்டர் உயரம் கொண்ட சௌகம்பா, 7120 மீட்டர் உயரம் கொண்ட திரிசூலம் கொடுமுடிகள் உள்ளது. மேலும் கார்வால் பகுதியின் அதிக உயரத்தில் அமைந்த கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில், யமுனோத்திரி கோயில் மற்றும் பத்ரிநாத் கோயில்கள் அமைந்துள்ளது. கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகளின் பிறப்பிடமாக, கார்வாலில் அமைந்துள்ள கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி கொடுமுடிகள் அமைந்துள்ளது.

Thumb
சிவாலிக் மலைத்தொடரின் கார்வால் பகுதியின் அகலப்பரப்புக் காட்சி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads