நித்திய வீடு (பண்டைய எகிப்து)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நித்திய வீடு அல்லது நிலையான வீடு அல்லது மஸ்தபா (mastaba) (/ˈmæstəbə/,[1] /ˈmɑːstɑːbɑː/ or /mɑːˈstɑːbɑː/) or pr-djt எகிப்தின் துவக்க கால வம்சத்தினர் ஆட்சிக் காலத்தில் (கிமு 3150 கிமு -–கிமு 2686) பண்டைய எகிப்தியர்கள் அரச குடும்பத்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு செங்கற்களைக் கொண்டு செவ்வக வடிவத்தில் கட்டிய கல்லறைக் கட்டிடனர். இக்கல்லறை கட்டிட அமைப்பை அரபு மொழியில் மஸ்தபா என்று அழைத்தனர்.


பின்னர் பழைய எகிப்திய இராச்சிய காலத்தில் (கிமு 2686–கிமு 2181) இறந்தவர்களின் சடலங்களை நித்திய வீடுகளில் (மஸ்தபா) அடக்கம் செய்வதற்கு பதிலாக, சடலங்களை மம்மியாக்கி பிரமிடுகளில் அடக்கம் செய்தனர். ஆனால் அரச குடும்பத்தவர்கள் அல்லாதோரின் சடலங்கள் நித்திய வீடு எனும் செவ்வக வடிவ செங்கல் கட்டிடங்களில் தொடர்ந்து அடக்கம் செய்தனர். அரேபிய மொழியில் مصطبة மஸ்தபா என்பதற்கு கல் இருக்கை என்று பொருளாகும். [2][3]
Remove ads
வரலாறு
பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்வு இருப்பதாக நம்பினர். எனவே இறந்தோரின் சடலங்களை நித்திய வீடுகளில் புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.[4] [5]வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் இற்ந்தவர்களில் சடலங்களை மணலில் குழி பறித்து அடக்கம் செய்வதுடன், இறப்பிறகு பிந்தைய வாழ்கைக்குத் தேவையான பொருட்களையும் வைத்து அடக்கம் செய்தனர். பின்னர் எகிப்தின் துவக்க கால வம்சத்தினர் ஆட்சிக் காலத்தில், இறந்த அரச குடும்பத்தவர்களின் சடலங்களை செங்கற்களால் கட்டப்பட்ட நித்திய வீடுகளில் அடக்கம் செய்தனர். பழைய எகிப்திய இராச்சிய காலத்திலிருந்து, இறந்த அரச குடும்பத்தவர்களின் சடலங்களை மம்மியாக்கி, இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களுடன் பிரமிடுகளில் அடக்கம் செய்தனர்..[6] [7][8]புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – கிமு 1077) காலத்தில் அரசகுடுமபத்தவர் அல்லாதோரின் சடலங்கள் தொடர்ந்து நித்திய் வீடுகளில் அடக்கம் செய்யும் வழக்கம் படிப்படியாக கைவிடப்பட்டது.[9] பிரமிடுகளில் சடலங்களை மம்மியாக்கி அடக்கம் செய்யும் வழக்கம் பழைய எகிப்து இராச்சியத்தின் இறுதியில் அல்லது முதல் இடைநிலைக் காலத்தில் கைவிடப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads