நினைக்க தெரிந்த மனமே (திரைப்படம்)

1987 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நினைக்க தெரிந்த மனமே (திரைப்படம்)
Remove ads

நினைக்க தெரிந்த மனமே (Ninaikka Therintha Maname) என்பது 1987-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இக்காதல் திரைப்படம் கே. தினகர் எழுதியதும், சுரேஷ் இயக்கியதுமாகும். மணியன் எழுதிய வாழ்த்தும் நெஞ்சங்கள் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட,[1] இத்திரைப்படத்தில் மோகன், சந்திரசேகர், ரூபினி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1987 ஆகத்து 14 அன்று வெளியிடப்பட்டது.  

விரைவான உண்மைகள் நினைக்கத் தெரிந்த மனமே, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காமகோடியன் எழுதியிருந்தார்.[2][3] இப்படத்தில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, 13 வயதில், "கண்ணுக்கும் கண்ணுக்கும்" என்ற பாடலுக்கு இசைப்பலகை வாசித்தார்.[4]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

வெளியீடும் வரவேற்பும்

நினைக்க தெரிந்த மனமே 1987 ஆகத்து 14 அன்று வெளியானது.[5] இந்தியன் எக்ஸ்பிரஸ் "இந்நாவல் திரைப்படத்தைச் சுருங்கச் சொன்னால் பாடல்களாலும், சண்டைகளாலும் நிறைந்துள்ளது. படம் சிறிதாகவும், அழகானதாகவும் இருந்திருந்தால் அது பயனுள்ளது". என்று எழுதியது.[6] கல்கியின் ஜெயமன்மதன், "இளையராஜாவின் இசையை மட்டுமே படத்தைக் காப்பாற்றும் கருணையாகக் கண்டேன்" என்று எழுதினார்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads