நிம்ருத்

From Wikipedia, the free encyclopedia

நிம்ருத்map
Remove ads

நிம்ருத் (Nimrud) (/nɪmˈrd/; அரபி: النمرود) தற்கால ஈராக் நாட்டின் நினிவே ஆளுநகரகத்தில் மோசுல் நகரத்திற்கு தெற்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள பண்டைய நகரம் ஆகும். நிம்ருத் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

விரைவான உண்மைகள் நிம்ருத், மாற்றுப் பெயர் ...

வடக்கு மெசொப்பொத்தேமியாவில் டைகிரீஸ் ஆற்றின் கரையில் அமைந்த நிம்ருத் நகரம்[2], கிமு 879 முதல் 706 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

இந்நகரம் கிமு 1350 முதல், கிமு 612ல் நினிவே போர் முடியும் வரை பண்டைய அசிரியாவின் முக்கிய நகரமாக விளங்கியது.

நிம்ருத் நகரம் 360 ஹெக்டெர் பரப்பளவு கொண்டது.[3] பண்டைய நிம்ருத் நகரத்தின் அழிபாடுகள், தற்போதைய ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தின், மோசுல் நகரத்திற்கு தென்கிழக்கில் 30 கி.மீ. தொலவில் உள்ள அசிரியக் கிராமமான நூமானியாவில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிம்ருத் தொடர்பான அகழாய்வுகள் 1845, 1879 மற்றும் 1949 முதல் நடைபெற்றது.

நிம்ருத் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியத் தொல்பொருட்கள் ஈராக் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு உள்ளது.[4][5]

விவிலியம் காலத்திய புது அசிரியப் பேரரசர் நிம்ரோத்தின் பெயரால் இந்நகரம் நிம்ருத் என அழைக்கப்படுகிறது.[6][7]

Remove ads

பண்டைய வரலாறு

Thumb
நிம்ருத் நகரத்தின் அரண்மனையை கற்பனையுடன் 1853ல் கட்டப்பட்டது.
Thumb
நிம்ருத் நகர வரைபடம், 1920[8]

நிம்ருத் நகரம் நிறுவல்

மத்திய அசிரியப் பேரரசு காலத்தில் (கிமு 1365–1050), பேரரசர் முதலாம் சல்மேனேசெர் (கிமு 1274–1245) ஆட்சியின் போது நிம்ருத் பெரு நகரம் நிறுவப்பட்டது. இருப்பினும் அசூர் நகரமே பழைய அசிரியப் பேரரசின் தலைநகரகமாக கிமு 3500 முதல் விளங்கியது.

புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக

நிம்ருத் நகரம், புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக கிமு 879 முதல் 706 முடிய விளங்கியது. பேரரசர் இரண்டாம் அசூர்னசிர்பால் (கிமு 883–859) நிம்ருத் நகரத்தில் 5 கி.மீ. சுற்றளவில் சுவர்களுடன் கூடிய, குடியிருப்புப் பகுதிகள், பெரிய கோயில்களையும், அரண்மனைகளையும் எழுப்பினார். அரண்மனை சுவர்களில் சிற்பஙகள் செதுக்கி வைத்தார்.

Remove ads

தொல்லியல்

நிம்ருத் தொல்லியல் களங்களை அழித்தல்

இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் சிதைப்பதற்கு முன் நிம்ருத்தின் தொல்லியல் கள காணொளி[9]

2014ம் ஆண்டின் நடுவில், பண்டைய நிம்ருத் நகரத்தின் நினைவுச் சின்னங்களை, இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்த்தெறிந்தனர்.[10][11] [12][13]

ஈராக்கின் நிம்ருத் நகரத்தின் அருகில் உள்ள மோசுல் நகர அருங்காட்சியகத்தில் இருந்த அக்காத் பேரரசின் நினைவுச் சின்னங்களை 5 மார்ச் 2015ல் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் முற்றிலும் அழிக்கப்பட்டது.[14][15][16]

படக்காட்சிகள்

நிம்ருத் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சியில் உள்ளது
Remove ads

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

    மேற்கோள்கள்

    மேலும் படிக்க

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads