லம்மசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லம்மசு (lamassu (ஆப்பெழுத்து: 𒀭𒆗, an.kal; சுமேரியம்:dlammař; அக்காதியம்: lamassu; சிலநேரங்களில் லமஸ்சுஸ் என்றும் அழைப்பர்.[2][3])பண்டைய அசிரியர்களின் காவல்தெய்வம் ஆகும். லம்மசு காவல் தெய்வத்தின் சிற்பங்கள் மனிதத் தலையும், காளை அல்லது சிங்க உடலும், சிறகுகளுடன் கூடியது.[4] சில தொல்லியல் ஆய்வாளர்கள் லம்மசு பெண் தெய்வத்தை பிரதிநிதித்துவம் செய்ய சித்தரிக்கப்படுகிறது எனக் கூறுகின்றனர்.[5] லம்மசு சிற்பம் இராசி மண்டலத்தின் விண்மீன்களின் கூட்டத்தை குறிப்பதாக கருதுகின்றனர்.[6][7]

Remove ads
படிமவியல்

மனிதத் தலையும், காளையின் உடலும், சிறகுகளும் கொண்ட லம்மசு சிற்பங்களின் உடலில் அழகிய மணிகள் செதுக்கப்பட்டுள்ளது.
கிமு 3,0000 ஆண்டுகளுக்கு முன்னர், மனிதத் தலையும், இறகுகளுடன் கூடிய இது போன்ற சிற்பங்கள், பண்டைய அண்மை கிழக்கின் எப்லா இராச்சியத்தில் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டதாக அகழாய்வுக் குறிப்புகள் கூறுகிறது. லம்மசு சிற்பங்கள் அசிரியர்களின் வீரத்தின் அடையாளமாக குறிக்கப்படுகிறது.[8][9]
அசிரியர்களின் அரண்மனை நுழைவாயில்களின் இருபுறங்களிலும் மற்றும் அரசவை மண்டபங்களிலும் லம்மசு சிற்பங்கள் காணப்படுகிறது.

Remove ads
படக்காட்சியகம்
- நிம்ருத் அரண்மனையின் லம்மசு, பிரித்தானிய அருங்காட்சியகம்
- துர்-சருக்கின் தொல்லியல் களத்தில் கிடைத்த லம்மசு, பிரித்தானிய அருங்காட்சியகம்
- நிம்ருத்தின் மனித முகமும், சிறகுகளுடன் கூடிய சிங்கம் மற்றும் காளையின் கால்கள் கொண்ட லம்மசு, மெட்ரோபாலிடன் கலை அருங்காட்சியகம், நியுயார்க், ஐக்கிய அமெரிக்கா
- ஈராக்கின் துர்-சருக்கின் தொல்லியல் களத்தில் கிடைத்த மனிதத் தலையும் சிறகுகளுடன் கூடிய காளையின் லம்மசு சிற்பம், இலூவா அருங்காட்சியகம், பாரிஸ், பிரான்சு
- துர்-சருக்கில் கண்டெடுக்கப்பட்ட லம்மசு சிற்பம், இலூவா அருங்காட்சியகம்
- நிம்ருத்தின் லம்மசு சிற்பம்
- கிமு 5ம் நூற்றாண்டின் அகாமனிசியப் பேரரசின் லம்மசு சிற்பம்
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads