நியூ கலிடோனியா

From Wikipedia, the free encyclopedia

நியூ கலிடோனியா
Remove ads

நியூ கலிடோனியா (New Caledonia, French: Nouvelle-Calédonie)[கு 1] என்பது பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியாவின் கிழக்கில் இருந்து 1,210 கி.மீ. தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.[3] மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் கிராண்ட் டெரே, லோயல்டீ தீவுகள், செசுட்டர்பீல்டு தீவுகள், பெலெப் தீவுக்கூட்டம், மற்றும் பல சிறிய தீவுகளும் உள்ளன.[4] செசுட்டர்பீல்டு தீவுகள் பவளக் கடலில் அமைந்துள்ளது.[5]

விரைவான உண்மைகள் நியூ கலிடோனியா, நிலை ...

நியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகி.மீ. ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும் (ஆகத்து 2014 கணக்கெடுப்பு)[6] இவர்களில் நியூகலிடோனியாவின் பழங்குடியினர் கனாக்கு மக்கள் எனப்படுவோர், ஐரோப்பியக் குடியேறிகள், பொலினீசிய மக்கள் (குறிப்பாக வலிசியர்), மற்றும் தென்கிழக்காசியர், சிறிய அளவு வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினரும் அடங்குவர்.. இதன் தலைநகரம் நூமியா ஆகும்.[3]

1986 ஆம் ஆண்டு முதல் குடியேற்றங்களை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலமாகப் பட்டியலிட்டு வருகிறது.[7] 1987 இல் இங்கு மக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பான்மையான மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது தடவையாக 2018 நவம்பர் 4 இல் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில்[8][9] 56.9% மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர்.[10] 2020 இல் நடந்த வாக்கெடுப்பில் 53.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இறுதியாக, 2021 நவம்பர் 12 இல் நடந்த வாக்கெடுப்பில் 96.49% மக்கள் விடுதலைக்கு எதிராகவும், 3.51% மக்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.[11] பழங்குடிகளான கனாக்கு மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றைக் காரணம் காட்டி இவ்வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.[12][13]

Remove ads

வரலாறு

நியூகலிடோனியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் கிமு 1600 முதல் கிபி 500 (லப்பித்தா காலத்தில்) இடம்பெற்றது.[14] லப்பித்தா மக்கள் பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் திறமை வாய்ந்த மாலுமிகளாகவும் வேளாண்மையில் சிறந்து விளங்கியதாகவும் அறியப்படுகிறது.[15]

Thumb
இரண்டு கனாக்கு வீரர்கள் ஆண்குறிக் கவசங்களுடனும் ஈட்டிகளுடனும், 1880களில்

பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் முதன்முறையாக நியூகலிடோனியாவை 1774 செப்டம்பர் 4 இல் தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது கண்ணுற்றார்.[16] இசுக்காட்லாந்தின் நினைவாக இதற்கு "புதிய கலிடோனியா" என அவர் பெயரிட்டார்.[16] கிராண்ட் டெரே தீவின் மேற்குக் கரையை 1788 இல் கொம்டே டி லப்பேரோசு என்பவர் கண்டுபிடித்தார். லோயால்ட்டி தீவுகளுக்கு வில்லியம் ராவென் என்பவர் 1793-96 இல் பயணம் செய்தார்.[17]

Remove ads

குறிப்புகள்

  1. முன்னர் அதிகாரபூர்வமாக "நியூ கலிடோனியா பிராந்தியமும் சார்புகளும்" (Territory of New Caledonia and Dependencies, French: Territoire de la Nouvelle-Calédonie et dépendances), சுருக்கமாக "நியூ கலிடோனியா பிராந்தியம்", இப்போது அதிகாரபூர்வமான பிரெஞ்சுப் பெயர் Nouvelle-Calédonie (Organic Law of 19 March 1999, article 222 IV – பார்க்க: ).

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads