நிரு

இந்திய இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிரு (பிறப்பு நிர்மலன் நடராஜா [1] 13 சனவரி 1980) என்பவர் ஒரு தமிழ் பின்னணி இசையமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். "பட்டுச் சேலை" போன்ற பாடல்களுடன் நேற்றிருந்தோம் எங்கள் வீட்டிலிலே என்ற இசையமைப்பிலிருந்து, நிரு இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் அண்மையில் கலாபக் காதலன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

விரைவான உண்மைகள் நிர்மலன் நடராஜா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்ட நிரு, இசை சார்ந்த அனைத்து விஷயங்களிலும் ஈடுபாட்டைக் கொண்டிருந்தார்.

1989 ஆம் ஆண்டில், நிரு பிரான்சின் பாரிசுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் மைசன் பாப்புலேயரின் வழிகாட்டுதலில் இருந்தார். அங்கு, தனது துல்லியத்தையும் மெல்லிசைத் திறமையையும் மேம்படுத்திக் கொண்டார். நிரு 2001 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுடன் தொடர்புடைய ஒரு நிறுவனமான எஸ்.ஏ.இ (பாரிஸ்) இல் பட்டம் பெற்றார். பின்னர் நிரு லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் மேற்கத்திய பாரம்பரிய இசையைக் கற்குமளவுக்கு முன்னேறினார்.

2001 முதல்

நிரு துவக்கத்தில் விளம்பரங்களுக்கு இசையமைக்கத் துவங்கினார். விரைவில் "நூவல் வே" மூலம் பிரான்சில் தமிழ் பாப்பிசைசையைக் கொண்டு வந்தார். நிருவின் நண்பரான பி. உன்னிகிருஷ்ணன், ஹரிஹரன், ஸ்ரீராம், கார்த்திக், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீநிவாஸ், அனுராதா ஸ்ரீநிவாஸ் குரல்கள் அடங்கிய மூங்கில் நிலா பாடல் கோவையை உருவாக்கினார். இதில் பாடலாசிரியர்கள் வைரமுத்து, கபிலன், பா விஜய், பழனிபாரதி, அறிவுமதி ஆகியோரும் பணியாற்றினர். [2]

பின்னர் நிரு பல்வேறு தொண்டுப் பணிகளுக்கு இசையமைப்பதற்காக தனது நேரத்தை செலவிட்டார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய சுனாமியின் நினைவாக, அறிவுமதியின் வரிகளில் திப்புவின் குரலில் "கடலா கடல் அம்மா" பாடலை உருவாக்கினார். நிரு தேசிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இசையமைத்துள்ளார். 2005 ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான கலாபக் காதலன் மூலம் நிரு ஒரு சுயாதீன இசை இயக்குநரானார். ஆழிப்பேரலை பின்னணியில் அறிவுமணியின் குறும்படத்தில் தங்கர் பச்சானின் மகனாக நடித்தார். [3]

2006 ஆம் ஆண்டில், நிரு ஜி.வி. பிலிம்ஸின் மாயாவியில் பணியாற்றினார். ராமேஸ்வரத்திற்கும் இசையமைத்தார். [4] [5]

Remove ads

இசைத் தொகுப்பு

இசைக் கோப்புகள்

  • மூங்கில் நிலா

தொலைக்காட்சி

  • மாயாவி (2006-07)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads