நிர்வாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிர்வாணம் (Nudity) என்பது ஒரு மனிதன் ஆடையற்ற நிலையில் இருப்பதை குறிக்கும். ஆடையணிவது என்பது மனித இனத்திற்கே உரித்தான ஒரு தனிப்பண்பாகும். ஆடைகளின் அளவானது சூழ்நிலையையும் சமூக மதிப்பீடுகளையும் சார்ந்தது ஆகும். சில நேரங்களில் மிகக் குறைந்த அளவு உடையே (பாலுறுப்புகளை மறைப்பதற்கு) போதுமென்றும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

Remove ads
வரலாறு
வரலாற்றின் தொன்ம காலத்தில் வெப்பம் மிகுந்த இடங்களில் வாழ்ந்த மனிதர்கள் உடைகள் அணிந்திருக்கவில்லை. அண்மைக்காலம் வரை அந்தமான் தீவுகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் வசித்த பல பழங்குடிச் சமூகங்கள் உடையணியவில்லை. இன்னும் இப்படி சில சமூகங்கள் உண்டு. குளிர் பிரதேச மக்கள் தோல் இலை போன்றவற்றால் உடலைப் பாதுகாத்திருக்கலாம்.
தற்கால மனிதர் பெரும்பாலும் காலநிலை, அழகு, பயன்பாடு, ஒழுக்கம் கருதி உடை அணிவது வழக்கம். எனினும் அன்றாட வாழ்வில் நீராடும் பொழுதும், சிலர் படுக்கும் பொழுது நிர்வாணமாக இருப்பார்கள். கடற்கரை, இரவு கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் நிர்வாணம் அனுமதிக்கப்படும் இடங்களும் உண்டு.
Remove ads
பொதுவிடத்தில் நிர்வாணம்
நிர்வாணம் தொடர்பான சமூகத்தின் அணுகுமுறை பண்பாடு, காலம், இடம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன. தற்காலத்தில் உடையணிவதே, குறிப்பாக பாலியல் உறுப்புகளை மறைத்து உடையணிவதே அனேக சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விதிவிலக்கான பல சமூகங்களும் உண்டு. தென் அமெரிக்காவில், ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடிவாசிகள் நிர்வாண நிலை அவர்களின் இயல்பான நிலையாக இருக்கிறது. ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிர்வாணத்தை அனுமதிக்கும் பல இடங்கள் உண்டு.
பண்டைய வரலாற்றில் நிர்வாணம்
- மீனவன், கிரேக்கம் கிமு 1600–1500
- மூன்று இளம் பெண்கள் குளிக்கிறார்கள். அட்டிகா, கிமு 440–433.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads