எகிப்தின் ஐந்தாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகிப்தின் ஐந்தாம் வம்சம் (Fifth Dynasty of ancient Egypt - Dynasty V) (ஆட்சிக் காலம்:கிமு 2494 - கிமு 2345) பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சம் மற்றும் ஆறாம் வம்சத்தின் தொடர்ச்சியாக எகிப்தியவியல் அறிஞர்களால் இவ்வம்சம் பார்க்கப்படுகிறது. ஐந்தாம் வம்சத்தவர்கள் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2494 முதல் கிமு 2345 முடிய 149 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தை நிறுவியவர் பார்வோன் யுசர்காப் ஆவார். [1]பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் ஐந்தாம் வம்சத்தின் (கிமு 2465 - 2325) முதல் மூன்று மன்னர்களான யுசர்காப், சஹுரா மற்றும் நெபெரிர்கரே ஆகியோர் நான்காம் வம்ச அரச குடும்பத்தைச் சேர்ந்த கெண்ட்கௌஸ் என்பாரின் மகன்கள் ஆவர். ஐந்தாம் வம்சத்தின் ஒன்பது மன்னர்களின் ஏழு மன்னர்கள், எகிப்தின் சூரியக் கடவுளான இராவுக்கு பிரமிடு போன்ற கோயில்களைக் கட்டி வழிபட்டனர்.
சூரியக் கோயிலுடன் இணைந்த ஐந்தாம் வம்ச மன்னர்களான யுசர்காப், உனாஸ் ஆகியோர் அபுசிர் மற்றும் சக்காரா நகரங்களில் கல்லறை பிரமிடுகள் பெரிய அளவிலும், சமயக் காட்சிகள் கொண்ட உள்அலங்கார வேலைபாடுகளுடன், அழகிய கலைநயத்துடன் நிறுவப்பட்டிருந்தது. மேலும் பிரமிடுகளில் பார்வோன்களின் வரலாற்றுக் குறிப்புகள், கடவுள்களிடம் அவர்களது தொடர்புகள் குறித்த சித்திரக் குறிப்புகளுடன் உள்ளது.
ஐந்தாம் வம்சத்தினர் கடல் வழியாக தற்கால லெபனானைக் கைப்பற்றி, கட்டுமானத்திற்கு தேவையான மரங்களை எகிப்திற்கு கொண்டு வந்தனர். மேலும் லிபியாவை வென்று, பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு தேவையான தொழிலாளர்களை அடிமைகளாக கொண்டு வரப்பட்டனர். சினாய் தீபகற்பத்தில் டர்காய்ஸ் வண்ணக் கல் சுரங்க வேலைகள் முன்பு போலவே தொடர்ந்தது.
நூபியா பகுதிகளில் காணப்பட்ட சுவர் சித்திரங்கள மற்றும் குறிப்புகள் கொண்ட முத்திரைகள் ஐந்தாம் வம்ச மன்னர்களின் இருப்பை ஆவணப்படுத்துகிறது. ஐந்தாம் வம்சத்தின் அரசவை உயர் அதிகாரிகள் அரச குடும்பத்தைச் சேராதவர்கள் ஆவார். இருப்பினும் சிலர் அரச இளவசிகளை திருமணம் செய்து கொண்டனர்.
ஐந்தாம் வம்ச ஆட்சியின் இறுதியில் வலுமிக்க சில மாகாண அதிகாரிகள் தன்னாட்சியுடன் தங்கள் பகுதிகளை ஆண்டனர். மேலும் தங்கள் கல்லறைகளையும் கட்டிக் கொண்டனர். பண்டைய எகிப்தின் ஆட்சி அதிகார வரலாற்றுக் குறிப்புகள் பாபிரஸ் எனும் காகிதத்தில் எழுதப்பட்டு பார்வோன்களின் கல்லறைப் பிரமிடுகளில் வைக்கப்பட்டிருந்தது. இருந்தது.
ஐந்தாம் வம்சத்தின் துவக்க கால பார்வோன்கள் தங்கள் பெயருடன் சூரியக் கடவுளான இராவின் பெயரையும் இணைத்துக் கொண்டனர். பிந்தைய கால மன்னர்கள் இறப்பின் கடவுளான ஓசிரிசுவை வழிபட்டு, கோயில்கள் பல எழுப்பினர்.
Remove ads
ஐந்தாம் வம்ச ஆட்சியாளர்கள்
எகிப்தின் ஐந்தாம் வம்சத்தினர் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு இருபத்தி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிமு இருபத்த்தி நான்காம் நூற்றாண்டு வரை 149 ஆண்டுகள் ஆண்டனர்.
- யுசர்காப் - 7 முதல் 8 ஆண்டுகள் வரை (முதல்)
- சகுரா- 13 ஆண்டுகள் - சகுரா பிரமிடு
- நெபெரிர்கரே ககை - 10 ஆண்டுகள் - நெபெரிர்கரே பிரமிடு
- நெபெரேபிரே - 2 ஆண்டுகள்
- செப்செஸ்கரே - சில மாதங்கள்
- நியூசெர்ரே இனி - 24 அல்லது 35 ஆண்டுகள்
- மென்கௌஹோர் கையூ - 8 அல்லது 9 ஆண்டுகள்
- ஜெத்கரே இசேசி - 32 ஆண்டுகள்
- உனாஸ் - 15–30 ஆண்டுகள் (இறுதி)
Remove ads
பண்டைய எகிப்திய வம்சங்கள்
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads