நில தயாக்கு மொழிகள்

ஆஸ்திரோனீசிய மொழி குடும்பத்தின் துணைக்குழு From Wikipedia, the free encyclopedia

Remove ads

நில தயாக்கு மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Dayak Darat; ஆங்கிலம்: Land Dayak Languages; சீனம்: 兰德达雅克语) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தில் ஒரு மொழிக்குழு ஆகும்.

விரைவான உண்மைகள் நில தயாக்கு மொழிகள்Land Dayak Languages Bidayuh Bahasa-bahasa Dayak Darat ...

போர்னியோவில் நில தயாக்குகள் எனும் பிடாயூ மக்கள் வாழ்கிறார்கள். அந்த பிடாயூ மக்களாலும்; மற்றும் சில இனததவராலும் பேசப்படும் இந்த நில தயாக்கு மொழிகள் 10-க்கும் மேற்பட்ட மொழிகளின் குழுமம் என அறியப்படுகிறது. மேலும் இந்த மொழிகளைத் தென்மேற்கு சுமத்திராவின் ரெஜாங் மக்களும் பேசுகிறார்கள்.

Remove ads

பொது

தயாக்கு எனும் சொல், புரூணை மலாய் மொழி - மெலனாவு மொழியில் இருந்து உருவானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. தயாக்கு என்றால் "உள்நாட்டு மக்கள்" என்று பொருள்படும்.

தயாக்கு மக்கள் ஒரு மொழியை மட்டும் பேசுவது இல்லை. இவர்களின் பூர்வீக மொழிகள்; நில தயாக்கு மொழிகள், மலாய் மொழி, சபகான் மொழி மற்றும் பாரிட்டோ மொழிகள் போன்ற மலாயா-பாலினேசிய மொழிகளின் வெவ்வேறு துணைக் குழுக்களைச் சேர்ந்தவையாக உள்ளன.[1][2]

உள்ளூர் மொழிகள்

தயாக்கு மக்களில் பெரும்பாலோர், அவர்களின் தாய்மொழிக்கும் கூடுதலாக, இருமொழி பேசுபவர்களாக உள்ளனர். அவர்கள் பிறந்த நாட்டைப் பொருத்து இந்தோனேசிய மொழி அல்லது மலாய் மொழிகளில் நன்றாகப் பேசக் கூடியவர்களாக உள்ளனர்.[3]

அத்துடன் போர்னியோவின் பல உள்ளூர் மொழிகள் வேறு எங்கும் பேசப்படவில்லை. போர்னியோ தீவில் சுமார் 170 உள்ளூர் மொழிகள் பேசப்படுகின்றன. அந்த உள்ளூர் மொழிகளில் சிலவற்றை சில நூறு பேர் மட்டுமே பேசுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

நூல்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads