நீசுனி நோவ்கோரத் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

நீசுனி நோவ்கோரத் மாகாணம்
Remove ads

நீசுனி நோவ்கோரத் மாகாணம் (Nizhny Novgorod Oblast, உருசியம்: Нижегоро́дская о́бласть, நீசெகரோத்ஸ்கயா ஓப்லஸ்த்) அல்லது நீசெகோரத் மாகாணம்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் நீசுனி நோவ்கோரத் நகரம் ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள்தொகை 3,310,597 ஆகும்.[8] 1932-1990 காலகட்டத்தில் இது கோர்க்கி ஒப்லாஸ்து என அறியப்பட்டது. இந்த மாகாணம் வழியாக வோல்கா ஆறு கடந்து செல்கிறது.

விரைவான உண்மைகள் நீசுனி நோவ்கோரத் மாகாணம்Nizhny Novgorod Oblast, நாடு ...
Remove ads

புவியியல்

Thumb
நீஷ்னி நொவ்கோரத் ஒப்லாஸ்து வரைபடம்

இந்த ஒப்ளாஸ்து 76.900 சதுர கிலோமீட்டர் (29,700 சதுர மைல்) பரப்பளவு கொண்டுள்ளது. இந்த பகுதியின் நிலப்பரப்பில் வேளாண் நிலம் 41%, காடுகள் பரப்பளவு 48%, ஏரிகள் மற்றும் ஆறுகள், 2%; பிறவகை நிலங்கள் 9% ஆகும். ஒப்லாஸ்து எல்லைகளாக வடக்கில் கொஸ்ட்ரோமா ஒப்லாஸ்து, வடகிழக்கில் கீரோவ் ஒப்லாஸ்து, கிழக்கில் மாரீ எல் குடியரசு மற்றும் சுவாஷ் குடியரசு ஆகியவையும், தெற்கில் மர்தோவியா குடியரசு, தென்மேற்கில் ரயாசன் ஒப்லாஸ்து, மேற்கில் விளாடிமிர் ஒப்லாஸ்து , வடமேற்கில் திறான ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.

இயற்கை வளங்கள்

இந்த ஒப்லாஸ்து குறிப்பிடும்படியான மதிப்புமிக்க இயற்கை வளம் அற்றதாக உள்ளது, ஓரளவு மணல் இருப்பு கொண்டுள்ளது. (டைட்டானியம்-ஸிர்கோனியம் மணல் உட்பட), மேலும் களிமண் , ஜிப்சம் , கரி , கனிம உப்பு , மரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

மாகாணத்தின் மக்கள் தொகை: 3,310,597 ( 2010 கணக்கெடுப்பு ); 3,524,028 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,714,322 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,[8] உருசிய இனக்குழுவினர் மக்கள் தொகையில் 3.109.661 ( 95.1% ) உள்ளனர். பிற இன குழுக்களில் தடார்கள் 44,103 ( 1.4%), மோர்தோவர்கள் 19,138 ( 0.6%), உக்ரைனியர்கள் 17,657 ( 0.5% ) மற்றும் வேறுபல இனக்குழுக்கள் இருந்தாலும் ஒவ்வொரு குழுவும் 0.5% க்கும் குறைவாகவே உள்ளனர், 42.349 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். .[12]

  • பிறப்பு (2011): 36,315 (1000 11.0)
  • இறப்பு (2011): 54,184 (1000 16.4 சதவீதம்)

2011 ல் 8.5% இறப்பு குறைந்துள்ளது,( 2010 ஆண்டை ஒப்பிடும்போது )[13] 2012 முக்கிய புள்ளிவிரங்கள்

  • பிறப்பு: 38,881 (1000 11.8)
  • இறப்பு: 52,771 (1000 16.0) [14]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]

2009 - 1.43 | 2010 - 1.42 | 2011 - 1.44 | 2012 - 1.55 | 2013 - 1.56 | 2014 - 1.59 (இ)

Remove ads

பொருளாதாரம்

தொழில் துறை உற்பத்தியில் இந்த பிராந்தியம் உருசியாவில் ஏழாவது இடத்தை வகிக்கிறது. பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் 650 க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன. கிட்டத்தட்ட 700,000 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பொருள் உற்பத்தி வேலை தொடர்புடைய தொழிலாளர்கள் 62% ஆவர். முன்னணி தொழில் பிரிவினர் பொறியியல் மற்றும் உலோக வேலைகள், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்கள் , காடுகளைச் சார்ந்த தொழில்கள், மரப்பொருட்கள், மற்றும் காகித தொழிற்சாலைகள் போன்றவை குறிப்பிடத்தக்கதாக உள்ளன.

சமயம்

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[16] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 69,2% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள், 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% கத்தோலிக்க திருச்சபை, மற்றும் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் (ஸ்லாவிக் நியோபகனியம்) . மக்கள் தொகையில் 15% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 10% நாத்திகர், 0.8% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[16]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads