நீண்டகரை
கேரளத்தின் கொல்லம் மாட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீண்டகரா (Neendakara) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொல்லம் நகரின் புறநகர்ப் பகுதியாகும்.[1] இரட்டை துறைமுகங்களான, நீண்டகரா மற்றும் சக்தி குலங்கர ஆகியவை இங்கு அமைந்துள்ளன. நீண்டகரா துறைமுகம் மாநிலத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாகும் .[2] இது நகர மையத்திலிருந்து (சிட்டி செண்டர்) 10 கி.மீ தொலைவில் உள்ளது.[3]

Remove ads
அமைவிடம்
நீண்டகரை பராவூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவிலும், கருநாகப்பள்ளி நகரத்திற்கு தெற்கே 14 கி.மீ தொலைவிலும் உள்ளது.
வரலாறு
16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகீசிய வணிகர்கள் கொல்லத்தில் (அப்பொழுது குயிலன்) குடியேறியபோது, அவர்களின் கப்பல்கள் நீண்டகரா வழியாகச் சென்றன, இப்போது தேசிய நெடுஞ்சாலை 66 இன் ஒரு பகுதியான நீண்டகரா பாலம் உள்ளது. இது அஷ்டமுடி ஏரியின் குறுக்கே சக்திகுளங்கராவுடன் இந்த கிராமத்தை இணைக்கிறது.
சொற்பிறப்பியல்
மலையாளத்தில், நீண்டகரா என்றால் "நீண்ட கரை" என்று பொருளாகும்.[4]
நோர்வே திட்டம்
1953 ஆம் ஆண்டு இந்தோ-நோர்வே மீன்வள சமூக திட்டத்தின் அமைக்கபட்ட இதன் தலைமையகம் 1961 ஆம் ஆண்டு வரை நீண்டகரையில் அமைந்திருந்தது, பின்னர் இந்த இடம் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.[5]
நீண்டகரை பாலம் மற்றும் அஷ்டமுடி ஏரியின் பரந்த காட்சி.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads