ஜெர்டான் பக்கி

From Wikipedia, the free encyclopedia

ஜெர்டான் பக்கி
Remove ads

ஜெர்டான் பக்கி (Jerdon's Nightjar) என்பது பக்கிகள் இனத்தை சார்ந்த ஒரு நடுத்தரமான அளவுடைய பறவையாகும். இது தென் இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.

விரைவான உண்மைகள் ஜெர்டான் பக்கி, காப்பு நிலை ...
Remove ads

பெயர்கள்

தமிழில்  :ஜெர்டான் பக்கி ஆங்கிலப்பெயர்  :Jerdon's Nightjar அறிவியல் பெயர் :கேப்ரிமுல்கசு ஆட்ரிபென்னிசு

உடலமைப்பு

இதனுடைய உடல் நீளம் சுமார் 28 செ. மீ. வரை மஞ்சள் பழுப்பான உடலில் பல நிறக்கறைகளும் கோடுகளும் கொண்டது.[2]

காணப்படும் பகுதிகள்

பசுமை மாறாக் காடுகளையும், புதர்க் காடுகளையும் சார்ந்து மலைகளில் 2000மீ உயரம் வரையிலும் ஆங்காங்கே காணலாம். பழுத்து உதிர்ந்து கிடக்கும் இலைகளிடையே எளிதில் பார்வைக்குப் புலப்படாத படியான சுற்றுச் சூழலோடு இயைந்ததாகப் பகலெல்லாம் படுத்திருக்கும். ஒரே இடத்தில் கூட்டமாகப் பத்துப் பன்னிரண்டு பறவைகள் கூடக் குழுவாக இருக்கக் காணலாம். மரக்கிளைகளில் குறுக்காகவும் நெடுக்காகவும் படுத்தபடி சயுங், சயுங் என உரக்கச் சம்மட்டியால் அடிக்கும்போது எழும் ஒலி போல குரல் கொடுக்கும்,

Thumb
நீண்டவால் பக்கி

உணவு

புழு பூச்சிகள், இரவில் பறக்கும் இறக்கையுள்ள பூச்சிகள் ஆகியவற்றைப் பிடித்துத் தின்னும்.[3]

இனப்பெருக்கம்

மார்ச் முதல் ஜூலை வரை சிறு செடிகள் முளைத்துள்ள சிற்றோடைக் கரையில் தரையில் காய்ந்த இலைதழைகளைக் குவித்து 2 முட்டைகள் இடும்.

பாதுகாப்பு

ஜெர்டான் பக்கி 2004ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இது பெரிய வரம்பைக் கொண்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை நிலையானதாக கருதப்படுகிறது.[1]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads