நீலகண்ட சோமயாஜி
கேரளப் பயில்முறை வழிவந்த இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர். From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலகண்ட சோமயாஜி (Nilakantha Somayaji, നീലകണ്ഠ സോമയാജി, 14 சூன் 1444 – 1544) அல்லது கேளல்லூர் சோமாத்திரி என்றும் அழைக்கப்படுபவர் கேரளப் பயில்முறை வானவியல் மற்றும் கணித வழிவந்த ஒரு கணிதவியலாளரும் வானவியலாளரும் ஆவார்.[1] பொதுவாண்டு 1501-இல் நிறைவுற்ற தந்திரசங்கிரகா எனும் விரிவான வானவியல் ஆய்வுக் கட்டுரை இவருடைய புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றாகும். ஆர்யபட்டிய பாஷ்யம் என்ற பெயரில் ஆர்யபட்டியத்துக்கு ஒரு விரிவான விளக்கவுரையையும் படைத்துள்ளார். இந்த விளக்கவுரையில் முக்கோணவியல் சார்புகளின் முடிவிலித் தொடர் விரிவாக்கத்தைப் பற்றியும் இயற்கணிதம் மற்றும் கோள வடிவியலில் உள்ள சிக்கல்களையும் அலசியுள்ளார். மாதவரின் கேரளப் பள்ளி. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கமும் எழுதியுள்ளார்.
தெற்கு மலபார் பகுதியிலிருந்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் நீலகண்டர்.[2] தன் வாழ்வையும் தான் வாழ்ந்த காலத்தையும் விளக்கமாகப் பதிவு செய்த வெகு சில இந்திய அறிஞர்களில் இவரும் ஒருவராவார்.[3][4] சோமயாஜி என்பது சோமயக்ஞ வேதச் சடங்கை மேற்கொண்ட நம்பூதிரிக்கு வழங்கப்படும் பட்டப்பெயராகும்.[5] சோமயாஜி என்பது பேச்சு வழக்கில் சோமாத்திரி என்று மறுவி அவரது பெயராக வழங்கப்படுகின்றது.
தந்திரசங்கிரகா நூலில் ஆரியபட்டாவின் புதன், வெள்ளி கோள்களின் கருதுகோள்களைத் திருத்தினார். இந்தக் கோள்களின் மையம் என இவர் கணித்தச் சமன்பாடு பதினேழாம் நூற்றாண்டில் யோகான்னசு கெப்லரின் காலத்தில் மேம்படுத்தும் வரை துல்லியமாக இருந்தது.[6]
அவருடைய ஆர்யபட்டிய பாஷ்யாவில், பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டைக்கோ பிராகி முன்வைத்த டைக்கோனிக் அமைப்பை ஒத்த ஒரு பகுதியளவான ஞாயிற்றுமைய கோள் மாதிரிக்கான கணிப்பு முறையை உருவாக்கினார். இந்தக் கோள் மாதிரியில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் சூரியனைச் சுற்றுவதாகவும், சூரியன் பூமியைச் சுற்றுவதாகவும் கருதப்பட்டது. அவரைப் பின்பற்றிய பெரும்பாலான கேரளப் பயில்முறை வழிவந்த பல வானியலாளர்கள் இந்த கோள் மாதிரியை ஏற்றுக்கொண்டிருந்தனர்,[6][7]
அவருடைய ஜோதிர்மீமாம்ஸா எனும் நூலில் வானியலின் அவசியத்தை வலியுறுத்தியும், சரியான கண்காணிப்பும் கணக்கிடல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.[8]

Remove ads
படைப்புகள்
வானியல் மற்றும் கணிதம் தொடர்பான நீலகண்டரின் படைப்புகள் சில [3][9]
- தந்திரசங்கிரகா
- கோலசாரா
- சித்தாந்ததர்ப்பனா
- சந்திரச்சாயகணிதா
- ஆர்யபட்டிய பாஷ்யா
- சித்தாந்ததர்ப்பன வியாக்யா
- சந்திரச்சாயகணித வியாக்யா
- சுந்தராஜ பிரஸ்நோத்தரா
- கிரகநாடி கிரந்தா
- கிரகபரிக்ஷாகிரமா
- ஜோதிர்மீமாம்ஸா
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads