நுழைவாயில்களின் நூல்

From Wikipedia, the free encyclopedia

நுழைவாயில்களின் நூல்
Remove ads

நுழைவாயில்களின் நூல் (Book of Gates) புது எகிப்து இராச்சியக் காலத்திய இறுதிச் சடங்கு நுல்களில் கூறியுள்ளவாறு, இறப்பிற்குப் பின்னர் ஆன்மா பல நுழைவாயில்கள் வழியாக அடுத்தடுத்த உலகங்களுக்கு செல்வதை விவரிக்கிறது.[1] ஆன்மாவின் இப்பயணம், இரா எனும் சூரியக் கடவுள் இரவு நேரங்களில் பாதாள உலகத்தில் பயணம் செய்வது போன்று உள்ளது. பயணத்தின் போது இறந்தவர் ஆன்மா பாதாள உலகின் நுழைவாயில்களின் தெய்வங்களை வணகிச் செல்ல வேன்டும். சிலர் பாதிப்பு இன்றி பாதள உலகத்தை கடந்து செல்வர். சிலர் பாதாள உலகத்தின் நெருப்பு ஏரியில் வேதனையை அனுபவிப்பார்கள் என பாதாள நுழைவாயில்களின் நூல் கூறுகிறது.

Thumb
எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன்முதலாம் சேத்தி கல்லறையில் வரையப்பட்ட உலகின் நான்கு இன மக்களின் சித்திரங்கள்: லிபியர்கள், நூபியர்கள், லெவண்டியர்கள் மற்றும் எகிப்தியர்கள்
Thumb
உலக மக்களினங்களைக் குறிக்கும் வேறு சித்திரங்கள்

எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் இறுதிப் பார்வோன் ஹொரெம்ஹெப் மற்றும் இருபதாம் வம்சத்தின் ஆறாம் பார்வோன் ஏழாம் ராமேசஸ் கல்லறைகளில் நுழைவாயில்களின் நூல் மற்றும் சித்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுழைவாயில்களின் நூலில் பாதள உலகின் பெண் கடவுள்களின் பட்டியல் உள்ளது.

Remove ads

மனித வகையினர்

புகழ்பெற்ற எகிப்தியர்களின் இறந்தோருக்கான நுழைவாயில்கள் நூலில், எகிப்தியர்கள் மனித இனத்தை நான்காகப் பிரித்துள்ளனர். அவைகள் எகிப்தியர்கள், நூபியர்கள், லெவண்டியர்கள், லிபியர்கள் ஆகும். எகிப்தியர்களின் நுழைவாயில்களின் நூலில், இறந்த பார்னோனின் ஆன்மா மறு வாழ்க்கையின் போது, பாதாள உலகத்திற்கு செல்கையில் இந்நால்வகை மக்கள் ஊர்வலமாகச் செல்வதை ஓவியமாக சித்தரித்துள்ளது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads