நெதர்லாந்தின் மாகாணங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெதர்லாந்து மாகாணங்கள் என அழைக்கப்படும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் அரசியின் ஆணையாளர்கள் (Commissaris van de Koningin) எனப்படுபவர்களால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. லிம்பர்க் மாகாணத்தில் மட்டும் இவர்கள் ஆளுனர்கள் (Gouverneur) என அழைக்கப்படுகின்றனர். எல்லா மாகாணங்களும் முனிசிப்பாலிட்டி எனப்படும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. 13 மார்ச் 2010 நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த முனிசிப்பாலிட்டிகளின் தொகை 430 ஆகும்.[1]

விரைவான உண்மைகள் நெதர்லாந்தின் மாகாணங்கள் Provinces of the Netherlands Provincies van Nederland (Dutch), வகை ...
Remove ads

நிர்வாகம்

நெதர்லாந்து நாடு நீர் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நீர் மேலாண்மைக்குப் பொறுப்பாக உள்ள நீர்ச் சபைககள் (water board) இம் மாவட்டங்களை நிர்வகிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு சனவரி முதலாம் தேதி 27 இவ்வாறான நீர் மாவட்டங்கள் இருந்தன. நாடு உருவாவதற்கு முன்பே நீர்ச் சபைகள் இருந்துள்ளன. 1196ல் இவை முதன் முதலில் உருவாகின. டச்சு நீர்ச் சபை, இன்றும் செயற்படுகின்ற உலகின் சனநாயக நிறுவனங்களுள் மிகவும் பழையது எனக் கருதப்படுகின்றது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads