நெப்பெந்திசு காசியானா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெப்பெந்திசு காசியானா (Nepenthes khasiana) என்பது ஒருவகை ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது கொடி இனத்தைச் சேர்ந்த்தாகும். இது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள காசி மலைப் பகுதிகளில் காணப்படும் அகணிய உயிரித் தாவரமாகும். [3]
இந்தச் செடியில் ஜாடி போன்ற அமைப்பு உள்ளது இதற்கு பிட்சர் எனப் பெயராகும். இந்த ஜாடிகள் மூலமாக பூச்சிகளைப் இது பிடிக்கிறது. இதன் இலை இறகுபோல் வளர்ந்து அதன் நடுவில் நரம்பு, பற்றுக்கம்பிபோல் நீண்டு, பின் சுருண்டு, இலையின் நுணி ஜாடியாக மாறுகிறது. இதை இலை தாங்கியவாறு உள்ளது. இந்த ஜாடி பூச்சிகளைக் கவரும் விதத்தில் அழகிய நிறத்துடனும், உள்ளே தேனுடனும் இருக்கும். இதனால் பூச்சிகள் கவரப்பட்டு உள்ளே விழுந்து இறந்து போகின்றன. இந்த ஜாடியின் அடியில் உள்ள செரிக்கும் திரவங்கள் பூச்சியில் உள்ள நீர்மச்சத்துக்களை உறிஞ்சிக்கொள்கின்றன. இந்த அரியதாவரம் தமிழகத்தின், சேலம் மாவட்டம், ஏற்காடு தவரவியல் பூங்காவில் உள்ளது.[4]
- Upper pitcher of cultivated mature plant
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads