நெல்லிக்குப்பம்

From Wikipedia, the free encyclopedia

நெல்லிக்குப்பம்map
Remove ads

நெல்லிக்குப்பம் (ஆங்கிலம்:Nellikuppam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்குகிறது. நெல்லிக்குப்பம், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 10,763 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 46,678 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 82.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5072 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 966 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 16,826 மற்றும் 32 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 75.69%, இசுலாமியர்கள் 21.7%, கிறித்தவர்கள் 2.29%, தமிழ்ச் சமணர்கள் 0.19%, மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[5]

நெல்லிக்குப்பத்தில் சமூக அமைப்புகள்


சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் திருவள்ளுவர் மன்றம் 1950 ல் செயற்பட்டது. பகுத்தறிவாளர் கழகம் 1985 முதல் 2000ம் ஆண்டு வரை செயற்பட்டது. வாசகர் வட்டம் இது அரசு நூலகத்தின் வாசகர் வட்டமாகும் . இது சுமார் 20 ஆண்டு காலம் செயற்பட்டது. மாந்த நலச் சிந்தனையாளர் பேரவை,தமிழின இளைஞர் குழு,தமிழினியர் நூலக வாசகர் வட்டம், நகர வளர்ச்சி குழு, அறிவாலயம் போன்ற பல சமூக நல அமைப்புகள் நெல்லிக்குப்பத்தில் செயல்பட்டன.


Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads