நெல்லியடி மத்திய கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

நெல்லியடி மத்திய கல்லூரி
Remove ads

நெல்லியடி மத்திய கல்லூரி (Nelliady Central College) (முன்பு, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் (Nelliady Madhya Maha Vidyalayam)) யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடியில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இது இலங்கையின் தேசியப் பாடசாலைகளுள் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் நெல்லியடி மத்திய கல்லூரி Nelliady Central College, முகவரி ...
Remove ads

ஆரம்பம்

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 1921ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு

1946ஆம் ஆண்டில் இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவினால் 54 பாடசாலைகள் மத்திய மகா வித்தியாலயங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. அவற்றுள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமும் ஒன்றாகும்.[1] பின்னர், முன்னை நாள் அதிபர் திரு. செல்லத்துரை சேதுராஜா காலத்தில் அக்டோபர் 6, 2011இலிருந்து இக்கல்லூரியானது தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.[2]

ஈழப் போரின்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெரும்பாலான பள்ளிகளைப் போலவே இந்தக் கல்லூரியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஈழப்போரின்போது இக்கல்லூரியில் இலங்கை இராணுவம் நிலை கொண்டு அதன் முகாமாக பயன்படுத்தியது. 1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி இலங்கை இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளால் நெல்லியடி சமர் மேற்கொள்ளபட்டது. அப்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சிறிய ட்ரக் வண்டியை கப்டன் மில்லர் ஓட்டிச் சென்று, இலங்கையின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் இப்பாடசாலையில் நகழ்த்தப்பட்டது.[3][4]

Remove ads

இங்கு படித்தவர்கள்

பாடசாலைப் பண்

"வாழ்க வாழ்க வாழ்கவே..." இயற்றியவர பண்டிதர் க. வீரகத்தி

              பல்லவி
வாழ்க வாழ்க வாழ்கவே
எங்கள் கலைக் கோயிலென்றும்
வாழ்க வாழ்க வாழ்கவே
            அனுபல்லவி
நெல்லியடி மத்தியகல்லூரியாலயம்
நிகரில்லாத கலையினூற்று குருகுலபீடம்
               சரணம்
கண்விழித்த கமலமன்னர்

கவர்ச்சிபொங்கும் பார்வையும்

மெள்ள மெள்ள சொரிந்து நிற்கும்

மேன்மைமிக்க குரவர்கள்

செல்வமென்று போற்றுமெங்கள்

உயிரில்வாழும் செந்தமிழ்

அல்லல் நீக்கி ஆடசிகாண

அருள் வழங்கும் வாணியாய்

Remove ads

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads