நெ. பாசுகர் ராவ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெ. பாசுகர் ராவ் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளத்தின் தலைவர். இவரது சொந்த ஊர் ராயகடா. இவர் ஒடிசா மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும், தொழிலதிபராகவும் உள்ளார்.[1]
2016-ல், இவர் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான பிஜூ ஜனதா தளத்தின் வேட்பாளராக இருந்தார். இவர் பிரசன்னா ஆச்சார்யா மற்றும் பிஷ்ணு சரண் தாசு உடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] சூலை 1953-ல் பிறந்த இவர் 2008-ல் தமிழ்நாடு காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளம் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads