நேப்பியர், நியூசிலாந்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேப்பியர் (Napier, /ˈneɪpiər/ NAY-pi-ər; மாவோரி:அஹுரிரி) நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரையில் ஹாக் விரிகுடா பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமாகும். சூன் 2014 மதிப்பீட்டின்படி நேப்பியரின் மக்கள்தொகை 61,100 ஆகும். நேப்பியரின் தெற்கில் 18 கிலோமீட்டரில் தீவு நகரமான ஹேஸ்டிங்ஸ் அமைந்துள்ளது. இந்த இரு நகரங்களும் வழமையாக நியூசிலாந்தின் "விரிகுடா நகரங்கள்" எனப்படுகின்றன. இவை இரண்டின், நேப்பியர்-ஏசுட்டிங்சு, மொத்த மக்கள்தொகை 128,800 ஆகும். இவை நியூசிலாந்தின் ஐந்தாவது மக்கள்தொகை மிக்க நகரியப் பகுதியாக விளங்குகின்றது.
நேப்பியர் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனிலிருந்து ஏறத்தாழ 320 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ளது. நேப்பியரின் மக்கட்தொகை அடுத்துள்ள ஹேஸ்டிங்சை விடக் குறைவாக இருந்தபோதும் துறைமுகத்திற்கும் முதன்மை வானூர்தி நிலையத்திற்கும் அண்மித்துள்ளதால் முதன்மை பெறுகின்றது. நேப்பியரின் நிலப்பரப்பளவு 106 சதுர கி.மீ. ஆகவும் மக்களடர்த்தி ச.கி.மீக்கு 540.0 ஆகவும் உள்ளது.
தெற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரும் கம்பளி மையமாக நேப்பியர் விளங்குகின்றது. நியூசிலாந்தின் வடகிழக்கில் முதன்மைத் துறைமுகமாக விளங்கும் நேப்பியரிலிருந்து ஆப்பிள்கள், பேரிக்காய்கள், இசுடோன் பழங்கள் ஏற்றுமதியாகின்றன. தவிரவும் நேப்பியர் திராட்சை மற்றும் வைன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உள்ளது. மேலும் ஆட்டுக் கம்பளி, உறைந்த மாமிசம், மரக்கூழ், வெட்டுமரங்கள் ஏற்றுமதியாகின்றன.
நேப்பியர் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றது. 1931 ஹாக் விரிகுடா நிலநடுக்கத்தில் இடிபட்ட பின்னர் கட்டப்பட்டுள்ள 1930களின் கட்டிட வடிவமைப்பு முதன்மை ஈர்ப்பாக உள்ளது. கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலை, பானியா, நியூசிலாந்தில் மிகவும் படமெடுக்கப்பட்ட சுற்றுலா இடமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில் நேப்பியரில் நடைபெறும் ஆர்ட் டெகோ வார இறுதி நிகழ்விற்குப் பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads