நேரு கோப்பை பன்னாட்டு கால்பந்து போட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேரு கோப்பை (அல்லது ஓஎன்ஜிசி நேரு கோப்பை) அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்தும் ஓர் பன்னாட்டு சங்க காற்பந்தாட்டப் போட்டியாகும். 1982ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்தப் போட்டி 1998 முதல் 2006 வரை நடைபெறவில்லை. 1997ஆம் ஆண்டில் ஈராக் காற்பந்தாட்ட அணி வென்ற பிறகு 2007 ஆம் ஆண்டிலேயே மீளவும் துவங்கப்பட்டது. ஆகத்து 17 முதல் 29 வரை ஆடப்பட்ட 2007ஆம் ஆண்டுப் போட்டிகளில் சிரியா, கிர்கிசுத்தான், கம்போடியா, பங்களாதேசம் ஆகிய நாட்டு அணிகளுடன் இந்தியாவும் பங்கேற்றது. இந்த ஆண்டில் போட்டிகளின் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா வாகை சூடி நேரு கோப்பையை வென்றது.
2009ஆம் ஆண்டுக்கானப் போட்டிகள் புது தில்லியில் ஆகத்து 19 முதல் 31 வரை விளையாடப்பட்டன. பாலத்தீனக் காற்பந்து அணியை அனைத்திந்திய காற்பந்துக் கூட்டமைப்பு விளையாட அனுமதிக்காத நிலையில்[1] போட்டிகள் சுழல்முறை வடிவத்தில் ஐந்து அணிகளும் ஒன்றுடன் ஒன்றாக விளையாடப்பட்டன. முதலாவதாக வந்த இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் விளையாடின. இந்தியக் காற்பந்தாட்ட அணி சிரியாவை போட்டிநேரத்தில் 1-1 என்ற சமநிலை எய்தபின் பெனால்டிகளில் 5-4 என்ற கணக்கில் வென்று கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.
நேரு கோப்பையின் பதினைந்தாவது பதிப்பாக 2012ஆம் ஆண்டில் ஆகத்து 22 முதல் செப்டம்பர் 2 வரை புது தில்லியில் விளையாடப்பட்டது.[2] ஐந்து அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் கேமரூனும் விளையாடின. 120 மணித்துளிகள் ஆடிய பின்னரும் 2-2 என்ற சமநிலையில் இருந்த நிலையில் பெனால்டி முறை முடிவுமுறையில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வென்று மூன்றாம் முறையாக கோப்பையை வென்றது.[3][4]
Remove ads
போட்டித் தரவுகள்
Remove ads
மொத்த வெற்றிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads