நொய்யல் ஒரத்துப்பாளையம்
நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை From Wikipedia, the free encyclopedia
Remove ads
நொய்யல் ஒரத்துப்பாளையம் அல்லது ஒரத்துப்பாளையம் அணை என்பது நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இது 1992 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் பாசனபரப்பு 10,000 ஏக்கருக்கு மேற்பட்டதாகும், இவை திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ளன. இவ்வணை காங்கேயத்திற்கும் சென்னிமலைக்கும் இடையில் உள்ளது. காங்கேயத்திலிருந்து வடக்கே 16 கி.மீ. தொலைவிலும் திருப்பூரிலிருந்து கிழக்கே 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
கட்டப்பட்டு முதல் 5 ஆண்டுகளுக்கே விவசாயத்திற்குப் பயன்பட்டது, பின் திருப்பூர் பின்னலாடை சாய கழிவுகள் தேங்கும் குட்டையாகவே பயன்பட்டது [2]. இதனால் நீர்ப்பாசனத்திற்கு நொய்யல் ஆற்றையும் இந்த அணையையும் சார்ந்திருந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடுவதையே நிறுத்தி விட்டனர்.
சாயக் கழிவு நீர்க் குளமாக இந்த அணை மாறிப்போனதால், இதைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் வாழும் மக்களின் நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கிராமங்களுள் சென்னிமலை, ஊத்துக்குளி போன்றவை அடங்கும். தொல்லியல் அகழ்வாய்வுக் களமான கொடுமணல் கிராமமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads