நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் 820 ச.கி.மீட்டரில் பரவியுள்ள. உயிர்க்கோளக் காப்பகம் ஆகும்.[1] இது 1988ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2009 ஆம்ம் ஆண்டு 'மனிதனும் உயிர்க்கோளமும்' என்ற திட்டத்தின் கீழ் யுனெஸ்கோ இதனை உலக உயிர்க்கோளக் காப்பகமாக அறிவித்தது.[2][3]

விரைவான உண்மைகள் நோக்ரேக் தேசியப் பூங்கா Nokrek National Park, அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

மேற்கு கேரோ மலைகள், கிழக்கு கேரோ மலைகள், தெற்கு கேரோ மலைகள் போன்ற மூன்று மாவட்டங்களில் இக்காப்பகம் பரவிக் காணப்படுகிறது. நோக்ரெக் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய இதன் மைய மண்டலம் 47.48 ச.கி. மீட்டர் பரப்பளவு கொண்டது. இக்காப்பகம் பல ஜீவநதிகளுக்கும் ஊற்றுகளுக்கும் ஆதாரப்பகுதியாக விளங்குகிறது. சிம்சங் ஆறு, கெனால் ஆறு, பகி ஆறு, தரங் ஆறு மற்றும் ரோங்டிக் ஆறு போன்றவை முக்கிய ஆறுகளாகும்.[4] கடல் மட்டத்திலிருந்து 4650 அடிகள் உயரமுள்ள நோக்ரெக் சிகரத்தில் இக்காப்பகம் அமைந்துள்ளது. முக்கிய ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதியாக திகழ்வதும் இப்பகுதிக்கே உரித்தான எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற தாவர இனங்கள் மிகுந்து காணப்படுவதும் இக்காப்பகத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

Remove ads

தாவரங்கள்

உயரத்தை அடிப்படையாகக் கொண்டு வெப்பமண்டலம் மற்றும் பகுதி வெப்பமண்டலம் என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. மேலும் பசுமைமாறாக் காடு, பகுதி பசுமை மாறாக்காடு, மற்றும் மூங்கில் புதர்கள், புல்வெளிகள் மற்றும் ஆற்றோரங்களை உள்ளடக்கிய இலையுதிர் காடுகளில் பல தாவர வகைகள் மிகுந்து காணப்படுகின்றன. காரோ மலைகளின் மிக உயர்ந்த சிகரமான நோக்ரெக் பல்வேறு உயிரின வளம் மிக்கதாக காணப்படுகிறது. எலுமிச்சை இன மரங்களின் சரணாலயம் உலகிலேயே இங்கு தான் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல அரிய வகை ஆர்கிட் வகைகள், ராசமாலா, மெரந்தி, லாலி, செண்பகம் மற்றும் காட்டு எலுமிச்சை ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

Remove ads

விலங்குகள்

இங்கு அரிய வகைப் பறவை இனங்களும், பன்றிவால் குரங்கு இமாலயக் கருங்கரடி , புலி, சிறுத்தை, யானை, பறக்கும் பெரிய அணில் ஆகிய உயிரினங்கள் வாழ்கின்றன. இங்கு காட்டு மனிதன் அல்லது குரங்கு மனிதன் வாழ்வதாக ஊர்மக்களால் நம்பப்படுகிறது. [5] இந்த பூங்காவில் சிவப்பு பாண்டா விலங்குகள் வாழ்கின்றன.[6][7] இங்கு ஆசிய யானைகளும் வாழ்கின்றன.[8] இந்த பூங்காவில் அரிய வகை பூனைகளும் உள்ளன.[9]

இங்கு அரிய வகை பறவைகள் வசிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.[10][11]

மக்கள்

நிலக்கரி, சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்ற தாதுவளம் மிக்க இவ்வுயிர்க்கோளத்தில் சுமார் 40,000 மக்கள்தொகை கொண்ட, 128 கேரோ சமுதாய கிராமங்கள் உள்ளன. இக்காப்பகத்தில் 16.4 விழுக்காடு பரப்பில் காடழித்து பயிர்செய்வதால் மண்ணரிப்பு அதிகமாக ஏற்படுகிறது.[12]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads