நோட்டா (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நோட்டா (None of the Above - NOTA;) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பொத்தான் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பொத்தானை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, இப்பொத்தான் வாக்கு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.[1] வாக்குப் பதிவு இயந்திரத்தில் இந்தப் பொத்தானானது ஆகக்கடைசியில் கீழே அமைந்திருக்கும்.

Remove ads

நடைமுறை

நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது [2]

தமிழகத்தில் முதன்முறையாக

இந்த வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.[4] [5]

இந்தியப் பொதுத் தேர்தல், 2014

2014இல் இந்தியாவில் நடைபெற்ற இந்தியாவின் 16வது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 % (59,97,054) நோட்டா வாக்குகள் பதிவாகியது.[6][7]

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் பதிவாகியது.[8][9][10]

இந்திய அளவில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் 45,559 நோட்டா வாக்குகள் பதிவாகியது.[11]

நோட்டாவிற்கு ஆதரவான வழக்கு

ஒரு சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்த தொகுதியின் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மார்ச், 2021இல் பொது நல வழக்கு தொடரப்பட்டது. மேலும் அத்தொகுயின் மறு தேர்தலின் போது ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையமும், இந்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[12][13][14]

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads