தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014 From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014
Remove ads

இந்தியக் குடியரசின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 24, 2014 அன்று நடந்தது.

விரைவான உண்மைகள் 39 இடங்கள், First party ...
Remove ads

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் முன்னெடுப்புகள்

  • வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை பொதுமக்களிடையே பரப்பும்முகமாக அரசு சார்பற்ற அமைப்புகள் இரண்டுடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், ஒப்பந்தம் செய்தது.[1]
  • தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய நாளில் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.[2] தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியது.[3]
Remove ads

தேர்தல் அட்டவணை

  • தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[4]
மேலதிகத் தகவல்கள் தேதி, நிகழ்வு ...

தேர்தல் கூட்டணிகள்

அதிமுக

  • இத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதென தமிழக வாழ்வுரிமை கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் முடிவு செய்தன.[5]
  • கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, 4 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை அதிமுக அமைத்தது.[6]
  • தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததாக இடதுசாரிகள் தெரிவித்தனர்.[7][8] இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளதாக இவ்விரு கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.[9]
    • ஒரு தருணத்தில், தமிழ்நாட்டில் அதிமுகவும் இந்திய பொதுவுடமைக் கட்சியும் இணைந்து போட்டியிடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.[10][11][12] தமிழ்நாட்டில் அதிமுக - இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெறுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.[13]
    • மத்தியில் 10 வருடங்களுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியில் நரேந்திர மோடி அடுத்த இந்திய பிரதமராக கொண்டாடபட்டபோது. பாஜகவின் வலதுசாரி சித்தாந்ததிற்க்கு எதிராக தமிழகத்தில் ஜெயலலிதா அவர்கள் தனது அதிமுகவுடன் மதசார்பற்ற இடதுசாரி சித்தாந்த கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி (சி.பி.எம்) போன்ற கட்சிகள் தனது கூட்டணியில் இணையுமாறு அழைப்புவிடுத்தார்.
    • ஆனால் தொகுதி உடன்பாட்டால் இம்முறை இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் இணையாததால். அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டு தமிழகத்தில் 37 தொகுதிகளில் ஜெயலலிதாவின் அதிமுக கட்சி வென்று மத்தியில் நாடாளுமன்றத்தில் மதவாத கட்சிக்கு இடையே தனிப்பெரும் மாநில கட்சியாக உருவெடுத்தது. இந்த வெற்றியின் ரகசியத்தை செல்வி ஜெயலலிதாவிடம் கேட்டபோது இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட இது பெரியாரின் சித்தாந்ததிற்க்கு, கிடைத்த வெற்றி அண்ணாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, புரட்சி தலைவர் புகழிற்க்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
    • அதே போல் மத்தியில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பாண்மை இல்லாமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எங்கள் அதிமுகழக அரசு சார்பில் வெற்றி பெற்ற அனைத்து மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பாஜக அல்லாத அரசு ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி பொதுச்செயலரும், தமிழக முதலவருமான ஜெயலலிதா அவர்கள் கூறினார்.

பாஜக கூட்டணி

திமுக கூட்டணி

பொதுவுடமைக் கட்சிகள் கூட்டணி

  • பொதுவுடமைக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது இல்லையென்றான பின் அவை எக்கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிட்டன.[21]
  • இரு பொதுவுடமைக் கட்சிகளும் தலா ஒன்பது இடங்களில் போட்டியிட்டன.[22] இந்திய பொதுவுடமைக் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கோயம்புத்தூர், மதுரை, வட சென்னை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிட்டது.

காங்கிரசு

  • எக்கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை.
  • புதுச்சேரியில் இதன் வேட்பாளராக நடுவண் அரசின் அமைச்சர் நாராயணசாமியை அறிவித்தது.[23]

பிற கட்சிகள்

  • கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர் சுப. உதயகுமார் தன் ஆதரவாளர்கள் 500 பேருடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்[24] தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி எளிய மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் என்று கூறினார்.[25]
  • ஆம் ஆத்மி கட்சியின் ஏழாவது வேட்பாளர் பட்டியலில் 8 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என்றும் சுப. உதயகுமார் கன்னியாகுமரியிலிருந்து போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது[26]
  • ஆம் ஆத்மி கட்சியின் பன்னிரெண்டாவது வேட்பாளர் பட்டியலில் 9 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது [27]
Remove ads

கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்

  • அதிமுக, புதுச்சேரியையும் சேர்த்த 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது[28]. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவான பின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று ஜெயலலிதா கூறினார்.[29]
  • திமுக புதுச்சேரிக்கும் சேர்த்து 35 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.[30][31][32].
  • தேமுதிக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.[33]
  • பாசக கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியலை பாசக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார், இதில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும் பாசக 8 இடங்களிலும் மதிமுக 7 இடங்களிலும் கொங்கு மக்கள் தேசிய கட்சியும் இந்திய ஜனநாயக கட்சியும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றனர்.[34]
  • மதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வைகோ அறிவித்தார்[35]
  • காங்கிரசில் 30 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்[36]
  • இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்[37]:
மேலதிகத் தகவல்கள் தொகுதி, வேட்பாளர் ...
அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
Remove ads

கட்சிகளின் தேர்தல் பரப்புரை

  • நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது முதற்கட்ட பரப்புரையை, அதிமுக பொதுச் செயலராகிய ஜெயலலிதா மார்ச் 3 முதல் ஏப்ரல் 5 வரை ஈடுபடுவாரென தெரிவிக்கப்பட்டது. விரிவான பயண விவரமும் வெளியிடப்பட்டது.[38]

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

  • அதிமுகவின் தேர்தல் அறிக்கை பெப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்டது.[39]
  • திமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11 அன்று வெளியிடப்பட்டது.[40]
  • இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)த்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.[41]

தேர்தல் கருத்துக் கணிப்புகள்

  • பெப்ரவரி 13, 2014 அன்று டைம்ஸ் நொவ் தொலைக்காட்சி - CVoter நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் விவரம், வெளியிடப்பட்டது[42]:
மேலதிகத் தகவல்கள் கட்சி, கணிக்கப்பட்ட இடங்கள் ...
மேலதிகத் தகவல்கள் நிறுவனம், கருத்துகணிப்பு வெளியான தேதி ...
  • க.எ = கருத்துகணிப்பு எடுக்கவில்லை அல்லது தமிழகத்துக்கு என்றில்லாமல் அகில இந்திய கணிப்புடன் இணைத்து சொல்லப்பட்டது
Remove ads

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

  • வேட்புமனுவினை தாக்கல் செய்தல் ஏப்ரல் 5 அன்று முடிவடைந்த நிலையில், மொத்தம் 1318 பேர் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர்[49][50].
மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
  • தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்:
மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
  • வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்:
மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
  • களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்:
மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
Remove ads

வேட்பாளர் இறுதிப் பட்டியல் (முக்கிய கட்சிகள், தொகுதிவாரியாக)[51]

மேலதிகத் தகவல்கள் தொகுதியின் பெயர், வேட்பாளர் ...

.[22] இந்திய பொதுவுடமைக் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி

Remove ads

வாக்குப்பதிவு

2009 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுடன் ஒரு ஒப்பீடு

தொகுதியின் எண்தொகுதியின் பெயர்2009 வாக்குப்பதிவு சதவீதம்[52]2014 வாக்குப்பதிவு சதவீதம் [53][54]வித்தியாசம்
1.திருவள்ளூர்70.57%73.73%3.16%
2.வட சென்னை64.91%63.95%0.96%
3.தென் சென்னை62.66%60.37%2.29%
4.மத்திய சென்னை61.04%61.49%0.45%
5.ஸ்ரீபெரும்புதூர்66.10%66.21%0.11%
6.காஞ்சிபுரம் (தனி)74.24%75.91%1.67%
7.அரக்கோணம்77.84%77.80%0.04%
8.வேலூர்71.69%74.58%2.89%
9.கிருஷ்ணகிரி74.16%77.68%3.52%
10.தருமபுரி72.75%81.14%8.39%
11.திருவண்ணாமலை79.89%78.80%1.09%
12.ஆரணி76.62%80.00%3.38%
13.விழுப்புரம் (தனி)74.58%76.84%2.26%
14.கள்ளக்குறிச்சி77.28%78.26%0.98%
15.சேலம்76.45%76.73%0.28%
16.நாமக்கல்78.70%79.64%0.94%
17.ஈரோடு75.98%76.06%0.08%
18.திருப்பூர்74.67%76.22%1.55%
19.நீலகிரி (தனி)70.79%73.43%2.64%
20.கோயம்புத்தூர்70.84%68.17%2.67%
21.பொள்ளாச்சி75.83%73.11%2.72%
22.திண்டுக்கல்75.58%77.36%1.78%
23.கரூர்81.46%80.47%0.99%
24.திருச்சிராப்பள்ளி67.35%71.11%3.76%
25.பெரம்பலூர்79.35%80.02%0.67%
26.கடலூர்76.06%78.69%2.63%
27.சிதம்பரம் (தனி)77.30%79.61%2.31%
28.மயிலாடுதுறை73.25%75.87%2.62%
29.நாகப்பட்டினம் (தனி)77.71%77.64%0.07%
30.தஞ்சாவூர்76.63%75.49%1.14%
31.சிவகங்கை70.98%72.83%1.85%
32.மதுரை77.48%67.88%9.60%
33.தேனி74.48%75.02%0.54%
34.விருதுநகர்77.38%74.96%2.42%
35.இராமநாதபுரம்68.67%68.67%= 0.00%
36.தூத்துக்குடி69.13%69.92%0.79%
37.தென்காசி (தனி)70.19%73.6%3.41%
38.திருநெல்வேலி66.16%67.68%1.52%
39.கன்னியாகுமரி64.99%67.69%2.70%

நோட்டா வாக்களித்தோர் விவரம்

தொகுதியின் எண்தொகுதியின் பெயர்நோட்டா வாக்களித்தோர்
1.திருவள்ளூர்23,598
2.வட சென்னை17,472
3.தென் சென்னை20,402
4.மத்திய சென்னை21,959
5.ஸ்ரீபெரும்புதூர்27,676
6.காஞ்சிபுரம் (தனி)17,736
7.அரக்கோணம்10,370
8.வேலூர்7,100
9.கிருஷ்ணகிரி16,020
10.தருமபுரி12,693
11.திருவண்ணாமலை9,595
12.ஆரணி9,304
13.விழுப்புரம் (தனி)11,440
14.கள்ளக்குறிச்சி10,901
15.சேலம்9,595
16.நாமக்கல்16,002
17.ஈரோடு16,268
18.திருப்பூர்13,941
19.நீலகிரி (தனி)46,559
20.கோயம்புத்தூர்17,428
21.பொள்ளாச்சி12,947
22.திண்டுக்கல்10,591
23.கரூர்13,763
24.திருச்சிராப்பள்ளி22,848
25.பெரம்பலூர்11,605
26.கடலூர்10,338
27.சிதம்பரம் (தனி)12,138
28.மயிலாடுதுறை13,181
29.நாகப்பட்டினம் (தனி)15,662
30.தஞ்சாவூர்12,218
31.சிவகங்கை7,988
32.மதுரை19,866
33.தேனி10,312
34.விருதுநகர்12,225
35.இராமநாதபுரம்6,279
36.தூத்துக்குடி11,447
37.தென்காசி (தனி)14,492
38.திருநெல்வேலி12,893
39.கன்னியாகுமரி4,150

பிற குறிப்பிடத்தக்க தகவல்கள்

  • நாடாளுமன்றத் தேர்தலில் 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.[55]
  • வாக்காளர்ப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3,341 மூன்றாம் பாலினத்தவர்களில், 419 பேர் (12.54%) தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.[56]

மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி 73.67% என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[57]

இடைத்தேர்தல்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்டது.

Remove ads

தேர்தல் முடிவுகள்

விரிவான தரவுகளுக்கு -

கூட்டணி வாரியாக

மேலதிகத் தகவல்கள் அதிமுக, இடங்கள் ...
Thumb

பச்சை நிறம் = அதிமுக வென்ற தொகுதிகள், ஆரஞ்சு நிறம் = பாஜக வென்ற தொகுதி, இளம்பச்சை நிறம் = பாமக வென்ற தொகுதி

தொகுதிவாரியாக சுருக்கமான விவரம்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், தொகுதி ...
Remove ads

இதையும் காண்க

தமிழ் விக்கிசெய்தியில் செய்திக் கட்டுரைகள்...

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads