2014 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியாவின் 16வது மக்களவைத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியப் பொதுத் தேர்தல் 2014 (Indian general election of 2014) இந்தியாவின் 16வது மக்களவையைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களில் நடைபெற்றது. இந்திய வரலாற்றில் 1951க்கு பிறகு, அதிக நாட்கள், பல்வேறு கட்டங்களாக, வாக்குப்பதிவு நடைபெற்ற தேர்தல், இது ஆகும். இதற்கு முன் அதிக நாட்கள் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்களுக்கு நடந்தது[3]. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, இத்தேர்தலில் 814.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றதால் இது உலகின் மிகப் பெரிய தேர்தல் ஆகவும் கணிக்கப்படுகிறது.[4] 2009 தேர்தலுக்குப் பின்னர் 100 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[5] 543 தொகுதிகளுக்கு மொத்தமாக 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[6]
பதினைந்தாவது மக்களவையின் பதவிக்காலம் மே 31 இல் முடிவடைவதற்கு 15 நாட்களுக்கு முன்னர், 2014 மே 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 989 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டன.[6] சராசரியாக 66.38 வீதமானோர் இத்தேர்தலில் வாக்களித்தனர். இம்முறையே இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமாக வாக்களிக்கப்பட்டது.[6] தேசிய சனநாயகக் கூட்டணி 336 தொகுதிகளைக் கைப்பற்றியது. இக்கூட்டணியின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெற்றது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 59 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. இவற்றில் இந்திய தேசிய காங்கிரசு 44 இடங்களைக் கைப்பற்றியது.[7]
Remove ads
குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர் குற்ற வழக்குகளில் தொடர்புடையர்கள் என தேர்தல் ஆணையத்திடம் தாங்களே அறிவித்துள்ளனர்.[8]
பின்னணி
இந்திய அரசியலமைப்பின் படி, மக்களவைக்கான தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் முன்கூட்டியே கலைக்கும் போது நடைபெறுகின்றன. 15வது மக்களவைக்காக நடத்தப்பட்ட முந்தைய தேர்தல் 2009 ஏப்ரல்-மே மாதங்களில் இடம்பெற்றன. இதன் காலம் 2014 மே 31 இல் முடிவடைய வேண்டும். 16வது மக்களவைக்கான தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தால் முதற்தடவையாக ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட்டன.
2009 தேர்தல்களின் பின்னர் அண்ணா அசாரே தலைமையில் நடத்தப்பட்ட இலஞ்ச ஒழிப்பு இயக்கம், மற்றும் ராம்தேவ் சுவாமிகள், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரால் நடத்தப்பட்ட இதே போன்ற போராட்டங்கள் நாட்டில் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தன.[9] கெச்ரிவால் 2012 இல் ஆம் ஆத்மி கட்சி என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்க தெலுங்கானா இயக்கம் நடத்தப்பட்டது. ஆந்திரா முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் இறப்பை அடுத்து ஆந்திராவிலும் அரசியல் குழப்ப நிலை உருவானது. அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்தார்.
15வது மக்களவையின் கடைசி அமர்வு 2014 பெப்ரவரி 6 இல் ஆரம்பித்து பெப்ரவரி 21 இல் முடிவடைந்தது. கடைசி அமர்வில் ஊழலைக் கட்டுப்படுத்தும் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.[10]
Remove ads
தேர்தல் அட்டவணை
தேர்தல் ஏப்பிரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்றன[11][12]

இந்தியத் தேர்தல் ஆணையம் மிசோரமின் தேர்தல் தேதியை ஏப்பிரல் 9 லிருந்து ஏப்பிரல் 11க்கு மாற்றியது.[14][15]
கூட்டணி
ஆம் ஆத்மி கட்சி
- ஆம் ஆத்மி கட்சி தங்கள் சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.[16]
- ஆஆகட்சி இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தங்கள் சார்பில் போட்டியிடும் 30 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.[17]
- இதன் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் போட்டியிடும் 20 தொகுதிகளும் அவற்றுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்[18]
- நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது.[19]
- ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் 50 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் [20][21]
- ஆறாவது வேட்பாளர் பட்டியலில் 55 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[22]
- ஏழாவது வேட்பாளர் பட்டியலில் 26 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[23]
- எட்டாவது வேட்பாளர் பட்டியலில் 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[24]
- ஒன்பதாவது வேட்பாளர் பட்டியலில் 30[25] வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
- பத்தாவது வேட்பாளர் பட்டியலில் 22 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[26]
- பதினொன்றாவது வேட்பாளர் பட்டியலில் 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் [27]
- பன்னிரெண்டாவது வேட்பாளர் பட்டியலில் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[28]
- பதிமூன்றாவது வேட்பாளர் பட்டியலில் 22 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[29]
- பதினான்காவது வேட்பாளர் பட்டியலில் 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[30]
காங்கிரசு
- காங்கிரசு மகாராட்டிரத்தில் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.
- பீகாரில் இராச்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
- காங்கிரசு தன் முதல் வேட்பாளர் பட்டியலில் 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. நந்தன் நிலெக்கணி, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.[31]
- காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த மத்தியப் பிரதேச இண்ட் தொகுதி வேட்பாளர் பாக்கிரத் பிரசாத் வேட்பாளர் பட்டியல் வெளியான பின் பாசகவில் இணைந்தார்.[32]
- இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.[33]
- 58 பேர் உடைய மூன்றாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது [34].
- 50 பேர் உடைய நான்காவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது[35]
- 26 பேர் உடைய ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது [36]
- 16 பேர் உடைய ஆறாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது[37]
- 12 பேர் உடைய ஏழாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது[38]
பாஜக
- பாஜக தங்கள் சார்பில் போட்டியிடும் 54 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.[39][40]
- இரண்டாவது பட்டியலில் எதியூரப்பா உள்ளிட வேட்பாளர்கள் 52 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டனர்.[41]
- 97 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.[42]
- 93 பேர் கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது [43]
- 67 பேர் கொண்ட ஐந்தாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[44]
- 14 பேர் கொண்ட ஆறாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[45]
- 14 பேர் கொண்ட ஏழாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[46]
- கோவா விகாஷ் கட்சி பாசகவுக்கு ஆதரவு தெரிவித்தது.[47]
பொதுவுடமைவாதிகள்
- இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) தங்கள் சார்பில் போட்டியிடும் 59 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.[48][49]
மூன்றாவது அணி
காங்கிரசு, பாசக கூட்டணியில் அல்லாத அதிமுக, சமாஜ்வாதி கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), ஜனதா தளம் (மதசார்பற்ற), ஜனதா தளம் (ஐக்கிய), பிஜு ஜனதா தளம், அசாம் கன பரிசத், பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிசக் கட்சி, ஜார்கண்ட் விகாஷ் மோர்சா [50] ஆகிய 11 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளன.
Remove ads
மாநிலங்கள்
தமிழ்நாடு
கேரளா
மகாராட்டிரம்
- மகாராட்டிரத்தில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் கூட்டணியை முடிவு செய்துள்ளன. இதன்படி காங்கிரசு 26 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரசு 22 தொகுதிகளிலும் போட்டியிடும்.[51]
பீகார்
- 2002ல் பாசக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய இராம்விலாஸ் பாசுவானின் லோக் சனசக்தி கட்சி பாசகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க உள்ளது.[52]
- காங்கிரசும் இராச்டிரிய ஜனதா தளமும் தேசியவாத காங்கரசும் கூட்டணி உடன்பாடு கண்டன.[53] இதன் படி காங்கிரசு 12 தொகுதியிலும் தேசியவாத காங்கிரசு ஒரு தொகுதியிலும் இராச்டிரிய ஜனதா தளம் 27 தொகுதியிலும் போட்டியிடும்.[54]
- ஜனதாதளம் (ஐக்கிய) முதல் பட்டியலில் 15 வேட்பாளர்களை அறிவித்தது.[55]
உத்திரப் பிரதேசம்
- சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் எதிர்த்து வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி நிறுத்தாது என்று உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்[56]
- காங்கிரசு ராஷ்டிரிய லோக்தளத்திற்கு 8 தொகுதிகளையும் அப்னா தளத்திற்கு 3 தொகுதிக்களையும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் ஒதுக்கியது [57]
- பகுஜன் சமாஜ் கட்சி 80 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது[58]
மேற்கு வங்காளம்
- பாசக வட வங்காள கட்சியான கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுடன் உடன்பாடு கண்டது.[59]
ஒடியா
- இங்கு மக்களவைத்தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. பிஜு ஜனதா தளம் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.[60][61]
அரியானா
இந்திய தேசிய லோக்தளம் அரியானாவின் பத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.[62] அரியானாவின் 10 தொகுதிகளில் பாசக 8 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான அரியானா ஜாங்கிட் காங்கிரசு 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.[63]
ஆந்திரப் பிரதேசம்
பாசகவும் தெலுங்கு தேசமும் இணைந்து போட்டியிடுகின்றன. தெலுங்கானாவில் பாசக 8 மக்களவை தொகுதிகளிலும் 47 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். சீமாந்திராவில் பாசக 5 மக்களவை தொகுதிகளிலும் 15 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் [64]
Remove ads
வாக்குப்பதிவு
முதற்கட்டம்[65]
இரண்டாம் கட்டம்[66]
மூன்றாம் கட்டம்[67][68][69][70]
மிசோரம்
மிசோரமின் ஒரு மக்களவைத்தொகுதிக்கு ஏப்பிரல் 11 அன்று நடந்த தேர்தலில் 61.70% வாக்குகள் பதிவாகின.[71] ஏப்பிரல் 11 அன்று மிசோரமில் மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது.
நான்காம் கட்டம்[72][73]
ஐந்தாம் கட்டம்[74][75][76][77][78]
ஆறாம் கட்டம்[81][82]
ஏழாம் கட்டம்[84][85]
எட்டாம் கட்டம்[86]
ஒன்பதாம் கட்டம்[87]
Remove ads
இந்தியஅளவில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம்
9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பது, சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்
இதற்கு முன்பு அதிக அளவாக, கடந்த 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன[88][89]
தேர்தல் செலவு
16-வது இந்திய மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு இந்திய நடுவண் அரசு 3,426 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இத்தொகை கடந்த மக்களவை தேர்தல் நடத்துவதற்கு ஆனதைக் காட்டிலும் 131 விழுக்காடு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகையில் தேர்தல் பாதுகாப்புச் செலவு சேர்க்கப்படவில்லை. தேர்தல் பாதுகாப்புச் செலவினை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக் கொண்டன.[90][91]
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
தேர்தல் ஆணையத்தின் கட்டளைப்படி இந்திய மக்களவைத் தேர்தல் 2014 முடிந்த நாளான மே மாதம், 12-ஆம் நாள், மாலை 6.30க்கு பின் செய்தி ஊடகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின.[92]
தேர்தல் முடிவுகள்
விரிவான தரவுகளுக்கு -
336 | 147 | 60 |
தேஜகூ | ஏனைய | ஐமுகூ |
கட்சி | பாஜக | இதேகா | அதிமுக | அஇதிகா | பிஜத | சிசே | தெதேக |
தலைவர் | நரேந்திர மோதி | ராகுல் காந்தி | ஜெ. ஜெயலலிதா | மம்தா பானர்ஜி | நவீன் பட்நாய்க் | உதாவ் தாக்கரே | சந்திரபாபு நாயுடு |
![]() |
![]() |
![]() |
|||||
வாக்குகள் | 31.0%, 171,637,684 | 19.3%, 106,935,311 | 3.3%, 18,115,825 | 3.8%, 21,259,681 | 1.7%, 9,491,497 | 1.9%, 10,262,982 | 2.5%, 14,094,545 |
தொகுதிகள் | 282 (51.9%) | 44 (8.1%) | 37 (6.8%) | 34 (6.2%) | 20 (3.6%) | 18 (3.3%) | 16 (2.9%) |
282 / 543 |
44 / 543 |
37 / 543 |
34 / 543 |
20 / 543 |
18 / 543 |
16 / 543 |
கட்சி வாரியாக வெற்றி விவரம்
Remove ads
வேறு தகவல்கள்
- 1952 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மிகக் குறைந்தளவு முஸ்லிம் உறுப்பினர்கள் 2014 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 16வது மக்களவை 24 முசுலிம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இது 15வது மக்களவை முசுலிம் உறுப்பினர்களை விட 6 குறைவாகும். மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இது 4.4 விழுக்காடாகும். 1952 தேர்தலில் 4.3% முசுலிம்கள் வெற்றி பெற்றனர். இவ்வெண்ணிக்கை பின்னர் 5 முதல் 6 வீதம் வரை அதிகரித்து 1980 தேர்தலில் 9.3 வீதமாக அதிகரித்தது. அப்போது 49 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[96]
- இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாட்டில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் கட்டுப்பணத்தை இழந்தது.[97]
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட குஜராத், இராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், தில்லி, இமாசல பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், ஒடிசா, சீமாந்திரா (சூன் முதல் இது புதிய மாநிலமாக உருவாகிறது) மற்றும் கோவா முதலிய மாநிலங்களில் எத்தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.[சான்று தேவை]
- பாரதிய சனதாவின் 7 முசுலிம் வேட்பாளர்களில் ஒருவரும் வெற்றிபெற வில்லை. கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி சார்பில் ஒரு முசுலிம் வேட்பாளர் வெற்றிபெற்றார்.[98]
நோட்டா வாக்குகள்
- 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 % (59,97,054) நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளது.[சான்று தேவை]
- இந்திய அள்வில் அதிக பட்சமாக தமிழ்நாட்டில் நீலகிரி மக்களவைத் தொகுதிஇல் 45,559 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளது.[சான்று தேவை]
- தமிழ்நாட்டில் 39 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளது.[சான்று தேவை]
Remove ads
இதையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads