சி. வித்தியாசாகர் ராவ்

From Wikipedia, the free encyclopedia

சி. வித்தியாசாகர் ராவ்
Remove ads

சின்னமனேனி வித்தியாசாகர் ராவ் (பிறப்பு 1942) 30 ஆகத்து 2014-இலிருந்து மகாராட்டிர மாநிலத்தின் ஆளுநராகச் செயல்பட்டவர் [2] . கொனியேட்டி ரோசையாவின் பதவி காலம் முடிவடைந்ததால் 2, செப்டம்பர் 2016இலிருந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டார்.[3] . 1999 கால அடல் பிகாரி வாச்பாய் அரசில் இவர் உள்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். 12-ஆவது மற்றும் 13-ஆவது மக்களவைக்குத் தெலங்காணா மாநிலத்திலுள்ள கரீம்நகர் தொகுதியிலிருந்து பாசக சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.

விரைவான உண்மைகள் சென்னமனேனி வித்தியாசாகர் ராவ் సి.హెచ్. విద్యాసాగర్ రావు, 21-ஆவது மகாராட்டிர ஆளுநர் ...

இவர் கரீம்நகர் மாவட்டத்திலுள்ள நகரம் என்ற சிற்றூரில் சி. சீனிவாச ராவுக்கும் சந்திரம்மாவுக்கும் வேலமா தோரா குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. இவர் பியுசி எனப்படும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை கரீம்நகர் மாவட்டத்திலுள்ள வேமுலவாடா நகரத்திலும் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை மகாராட்டிராவிலுள்ள நான்டெட் என்ற ஊரிலும் சட்டப் படிப்பை உசுமானியா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

சட்டம் முடித்து வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் 1972-இல் கரீம்நகர் மாவட்ட சனசங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெருக்கடி நிலையின்போது சிறை சென்றார். ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 1985-இலிருந்து 1998 வரை மேத்பல்லி சட்டமன்ற உறுப்பினராகச் பாசக சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1998, 1999 மக்களவை தேர்தலில் கரீம்நகர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-இல் ஆந்திர பாசக தலைவராகச் செயலாற்றினார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads