பஞ்சகன்னிகை

From Wikipedia, the free encyclopedia

பஞ்சகன்னிகை
Remove ads

இந்து தொன்மவியலில் ஐந்து புராணப் பெண்கள் பஞ்சகன்னிகைகள் (சமஸ்கிருதம்:पञ्चकन्या, pañcakanyā, பஞ்சகன்னியா) என்று அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்களே மிகச்சிறந்த தர்மப்பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் குறிக்கப்பெறுகிறார்கள்.

விரைவான உண்மைகள் பஞ்சகன்னிகை, அதிபதி ...

இவர்கள் அகலிகை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்களாவர். இவர்களில் அகலிகை, சீதை, தாரை மற்றும் மண்டோதரி ஆகியோர் இராமயாண காலத்தில் வாழ்ந்தவர்கள். துரோபதி மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்.

இவர்களைத்தவிற குந்தி தேவிக்கும் பஞ்சகன்னிகள் பட்டியலில் இடமளிக்கின்றனர்.

  1. அகலிகை - கௌதம முனிவரின் மனைவி
  2. திரௌபதி - பஞ்ச பாண்டவர்களின் மனைவி,
  3. சீதை - இராமனின் மனைவி,
  4. தாரை , வாலியின் மனைவி
  5. மண்டோதரி, இராவணனின் மனைவி[1]
Remove ads

அகலிகை

Thumb
அகல்யை

திருமாலின் மோகினி அவதாரத்தினை அறிந்த பிரம்மன், மோகினையைப் போன்ற அழகுடைய பெண்ணை படைக்க எண்ணினார். அழகில் எவருக்கும் ஈடு இணை இல்லாத அகலிகையை அவர் தோற்றுவித்தார். பின் அவளை கௌதம மகரிஷிக்கு திருமணம் செய்துவைத்தார். அழகில் மிக உயர்ந்தவளான அகலிகை மீது இந்திரன் மோகம் கொண்டார்.

அதனால் சேவலாக மாறி கூவி கௌதமரை ஆற்றங்கரைக்கு அனுப்பிவைத்து அகலிகையை வன்புணர்வு செய்தார். அந்நேரம் குடிலுக்கு திரும்பிய கௌதமர், அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். இவ்வாறு கல்லாக மாறிய அகலிகை ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள் பல சொல்லுகின்றன.

Remove ads

திரௌபதி

Thumb
ஐந்து கணவன்களுடன் திரௌபதி

திரௌபதி இதிகாசமான மகாபாரதத்தின் கதைநாயகியாவர். இவர் பாண்டவர்களான தர்மன் (யுதிஷ்டிரன்), பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்குப் பொதுவான மனைவியாவர். கௌரவர்களின் அரண்மனையில் தருமரும் சகுனியும் ஆடிய சூதாட்டத்தில் தருமன் நாடு, நகரம், அரண்மனை என அனைத்தையும் இழந்துவிட்டபின் திரௌபதியை வைத்து சூதாடினார். அப்பொழுதும் தோல்வியடைந்தமையால் திரௌபதி கௌரவர்களின் அரசனான துரியோதனால் ஆடை களையப்பெற்றார்.

இதனால் அவமானமடைந்த திரௌபதி கௌரவர்களை அழித்து முடித்த பின்பே தன் கூந்தலை முடிவது என்று சபதமேற்றார். இதனைப் பாஞ்சாலி சபதம் என்பர். இதுவே பாரதப் போருக்கு மூலமாக அமைந்தது.

Remove ads

சீதை

இராமயண இதிகாசத்தின் நாயகி சீதை. மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை பூமாதேவியின் புதல்வியாகக் கருதப் படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையைத் திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை இராமர் நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.

இராமனுடன் வனவாசம் சென்ற சீதையை, இராவணன் கவர்ந்து சென்றார். அவரை மீட்க இராமன், அனுமன் மற்றும் வானரப்படையுடன் இலங்கை சென்றார். இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டார். அதன்பின் இராவணனுடன் இருந்த சீதையின் கற்பில் சந்தேகம் கொண்டு இலக்குவனை விட்டு சீதையை காட்டில் விடச் செய்தார். காட்டில் சீதை லவன், குசன் என்ற இரு மைந்தர்களைப் பெற்றார். அதன்பின் அவர்களை இராமரிடன் ஒப்படைத்து பூமாதேவியைச் சரணடைந்தார்.

தாரை

தாரா இராமாயணக் கதையின் படி வாலியின் மனைவி. இவர்களது மகன் அங்கதன். இவர் வானர மருத்துவர் சுசேனரின் மகள் என்றும் கூறப்படுகிறார்.

மண்டோதரி

மண்டோதரி ராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள். இலங்கைக்குச் சென்ற அனுமன், முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன். சம்சுகிருதத்தில் மண்டோதரி என்ற சொல்லுக்கு “மெல்லிய வயிறாள்” என்று பொருள்

கருவிநூல்

இவற்றையும் காண்க

ஆதாரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads