பஞ்சார் (மொழி)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சார் மொழி இந்தோனேசியாவின் தென் கலிமந்தான் மாகாணத்தில் பஞ்சார் மக்களாட் பேசப்படும் இயன் மொழியாகும். பெரும்பாலான பஞ்சார் இன மக்கள் வணிக நோக்கில் பயணம் செய்வோராயிருப்பதால், இந்தோனேசியா முழுவதற்கும் மாத்திரமன்றி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தம் மொழியை எடுத்துச் செல்கின்றனர்.
கலிமந்தானில் உள்ள நான்கு இந்தோனேசிய மாகாணங்களில் மேலைக் கலிமந்தான் தவிர்த்து ஏனைய மூன்று மாகாணங்களிலும், அதாவது கீழைக் கலிமந்தான், நடுக் கலிமந்தான், தென் கலிமந்தான் ஆகிய மாகாணங்களில் பஞ்சார் மொழியே இணைப்பு மொழியாகத் தொழிற்படுகிறது. மேலைக் கலிமந்தான் மாகாணத்தில் மலாய் மொழியின் செல்வாக்குக் காணப்படுகிறது.
பஞ்சார் மொழி ஆறு மில்லியன் மக்களாற் பேசப்படுவதாயிருப்பினும், பொதுவாக "உள்ளூர் மலாய்" என்பதாகவே பொதுவாகக் கருதப்படுகிறது.[1] 2008 ஆம் ஆண்டின் அவுசுத்திரனீசிய அடிப்படைச் சொல்லியல் தரவுத்தளப் பகுப்பாய்வு[2] பஞ்சார் மொழியை மலாய்சார் மொழியாகவேனும் வகைப்படுத்தவில்லை. மேற்படி ஆய்வு 80% நம்பிக்கையில் பஞ்சார் மொழி ஏனைய மலாய-சும்பாவா மொழிகள் போலன்றி மலாய் மற்றும் இபானிய மொழிகளுக்கு அண்மித்தது என முடிவாக்கியது. மேற்படி ஆய்வில் உள்ளடக்கப்பட்ட மிகவும் வேறுபாடான மலாய்சார் மொழியாக பஞ்சார் மொழி காணப்படுகிறது.
பஞ்சார் மொழியில் ஏராளமான மலாய் மொழிச் சொற்களும் சில சாவக மொழி அடிச் சொற்களும் கலந்திருப்பினும் அவையனைத்துக்கும் நிகரான பஞ்சார் மொழி வழக்குகளும் காணப்படுகின்றன.
இந்தோனேசிய மொழி போன்றே பஞ்சார் மொழியும் இலத்தீன் அரிச்சுவடியைப் பயன்படுத்துகின்றது. அவ்வாறே, /a, i, u, e, o/ ஆகிய ஐந்து உயிரெழுத்துக்களைக் கொண்டுள்ளது.
Remove ads
மேலும் பார்க்க
- பஞ்சார் இனத்தினர்
- பஞ்சார்மாசின்
- தென் கலிமந்தான்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads