படிக்காதவன் (1985 திரைப்படம்)
இராஜசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
படிக்காதவன் இயக்குநர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-நவம்பர்-1985. 1982இல் வெளியான குத் தார் என்ற இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.
Remove ads
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இரு தம்பிகள் விதிவசத்தால் தங்கள் அண்ணனை விட்டுப் பிரிகின்றனர். ஒரு பெரியவரால் தத்து எடுக்கப்படும் அச்சிறுவர்கள் அவரின் பாதுகாப்பில் வளர்கின்றனர். இளைய அண்ணண் டாக்ஸி ஓட்டுநர் ஆகிறார். அவரின் கடின உழைப்பில் தம்பியைப் படிக்க வைக்கிறார். அண்ணனின் உழைப்பை மறந்து ஊதாரியாகவும் படிப்பில் அக்கறை இல்லாமலும் இருக்கிறார் தம்பி. அவரின் சதியால் ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார் இளைய அண்ணன். அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி தான் மூத்த அண்ணன். வழக்கின் முடிவு என்ன, பிரிந்த அண்ணன் தம்பிகள் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை. இத்திரைப்படம் அண்ணன் தம்பியின் பாசப் பிணைப்பைக் காட்டும் குடும்பச் சித்திரம் ஆகும்.
Remove ads
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - இராஜசேகர்
- ரஜினிகாந்த் - இராஜேந்திரன்
- அம்பிகா - மேரி
- ராமச்சந்திரனாக விஜய் பாபு
- ஜெய்ஷங்கர் - சக்ரவர்த்தி
- நாகேஷ் - இரஹீம்
- பூர்ணம் விஸ்வநாதன் - வேதாச்சலம்
- ராமநாதனாக தேங்காய் சீனிவாசன்
- ஜனகராஜ் - கபாலி
- இராஜசேகரின் மனைவி இராதாவாக வடிவுக்கரசி
- செந்தாமரை - வழக்கறிஞர்
- இரம்யா கிருஷ்ணன் - மஞ்சு
- பரிதாவாக இந்திரா
- சாந்தி
- சூர்யகலா
- இராசி
- இராமுவின் நண்பராக குண்டு கல்யாணம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] "ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்" என்ற பாடல் கீரவாணி இராகத்தில் அமையப்பெற்றது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads