பட்டாணி மாநிலம்
தாய்லாந்தில் உள்ள ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டாணி (ஆங்கிலம்: Pattani; தாய்: ปัตตานี); ஜாவி; ڤطاني ) என்பது தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் அமைந்த மாநிலம். இந்த மாநிலத்தின் தலைநகரம் பட்டாணி நகரம் ஆகும். இந்த மாநிலத்திற்கு அருகில் நாரதிவாட் (Narathiwat); சோங்கலா (Songkhla); சத்துன் (Satun); யாலா (Yala); ஆகிய மாநிலங்கள் உள்ளன.
பட்டாணி மாநிலம் தீபகற்ப மலேசியா பெருநிலப்பகுதியில், தாய்லாந்து வளைகுடா (Gulf of Thailand) கடற்கரையுடன் ஒட்டி அமைந்து உள்ளது. தெற்கில் சங்கலகிரி மலைத்தொடர் (Sankalakhiri Mountain Range) உள்ளது. அந்த மலைத் தொடரில் புடோ-சு-நிகை பாடி தேசிய பூங்கா (Budo-Su-ngai Padi National Park), மற்றும் யாலா; நாரதிவாட் மாநிலங்களின் எல்லைகள் உள்ளன.
இந்த மாநிலத்தின் 110 சதுர கி.மீ.; அதாவது மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 5.6 விழுக்காடு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு உள்ளது.[3]
Remove ads
சொற்பிறப்பியல்
பட்டாணி என்பது மலாய்ப் பெயரான பட்டானி (ஆங்கிலம்: Pattani; ஜாவி: ڤتاني) என்பதன் தாய் மொழி தழுவலாகும். "இந்தக் கடற்கரை" என்று பொருள்படும்.[4]
புராணக் கதைகளின் படி, முன்பு காலத்தில் பட்டாணியின் தலைவர் வேட்டையாடச் சென்றார். ஓர் ஆடு அளவுக்கு ஒரு சருகுமானைப் பார்த்தார். அந்தச் சருகு மான் திடீரென்று காணாமல் போனது. அந்தச் சருகு மான் எங்கு சென்றது என்று அவர் விசாரித்தார், அவருடைய ஆட்கள் "பட நி லா" ("Pata ni lah") என்று பதிலளித்தனர்.
மாறன் மகாவம்சன் மகள் பத்தினி
பின்னர் அவர்கள் அந்தச் சருகு மானைத் தேடினார்கள். ஆனால் அதற்குப் பதிலாக ஒரு முதியவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் தன் பெயர் சே' தானி (Che' Tani) என்று கூறினார். பின்னர் சருகு மான் காணாமல் போன இடத்தில் ஒரு நகரத்தை கட்ட தலைவர் உத்தரவிட்டார். எனவே இந்த நகரம் அந்த முதியவரின் பெயரால் பட்டாணி என்று அழைக்கப் படுவதாகவும் னம்பப்படுகிறது.
மற்றொரு பரிந்துரை: சமஸ்கிருதச் சொல்லான பத்தினி (Pathini) என்பதில் இருந்து வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அதாவது முந்தைய இலங்காசுகம் பேரரசை (Langkasuka Empire) நிறுவிய மாறன் மகாவம்சன் (Merong Mahawangsa) என்பவரின் மகளின் பெயர் பத்தினி. அந்தப் பெயரில் இருந்து பட்டாணிக்குப் பெயர் வந்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
Remove ads
வரலாறு
வரலாற்று ரீதியாக, பட்டாணி மாநிலம் முன்னர் காலத்தில் மலாய் மக்களின் பட்டாணி இராச்சியத்தின் (Patani Kingdom) மையமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக பட்டாணி மாநிலம் சயாமின் கண்காணிப்பிலும் இருந்து வந்தது.
1786-இல் பட்டாணி இராச்சியத்தை சயாம் கைப்பற்றியது. அதில் இருந்து சயாமினால் பட்டாணி ஆளப்பட்டு வருகிறது. பட்டாணி இராச்சியம் 7 சிறிய மாநிலங்களாக மாற்றப் பட்டன.
- பட்டாணி - Patani
- நோங்சிக் - Nhongchik
- ராமன் - Raman
- ரா-ங்கே - Ra-ngae
- சிபுரி - Saiburi
- யாலா - Yala
- யாரிங் - Yaring
1906-ஆம் ஆண்டில் 4 பெரிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன:
- பட்டாணி - Patani
- நாரதிவாட் - Narathiwat
- சிபுரி - Saiburi
- யாலா - Yala
இப்போது பட்டாணி, தாய்லாந்து நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads