பட்டிக்காடா பட்டணமா

பி. மாதவன் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

பட்டிக்காடா பட்டணமா
Remove ads

பட்டிக்காடா பட்டணமா (Pattikada Pattanama) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சுபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]

விரைவான உண்மைகள் பட்டிக்காடா பட்டணமா, இயக்கம் ...
Remove ads

இசை

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[4][5] "என்னடி ராக்கம்மா" பாடல் சண்முகப்பிரியா எனப்படும் கருநாடக ராகத்தில் அமைக்கப்பட்டது.[6] இது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடல் பின்னர் டி. இமானால் வாடா (2010) படத்தில் மீள்கலப்பு செய்யப்பட்டது.[7] டி. எம். சௌந்தரராஜனைப் பற்றி தி இந்து நாளிதழில் டி. கார்த்திகேயன் எழுதுகையில், "பட்டிக்கடா பட்டணமாவின் என்னடி ராக்கம்மா பல்லாக்கு என்ற நாட்டுப்புற பாடல் இன்றும் அதன் கிராமிய அடிகளாலும், அழகான இசையமைப்பாலும் மக்களைப் பைத்தியமாக்குகிறது, மேலும் மதுரையில் நடக்கும் கலாச்சார விழாக்களில் இந்தப் பாடல் அவசியம் இடம்பெறுகிறது" என்று குறிப்பிட்டார்.[8] "கேட்டுக்கோடி" பாடல் கவி பெரியதம்பியால் பாண்டி ஒலிபெருக்கி நிலையம் (2012) படத்தில் மீள்கலப்பு செய்யப்பட்டது.[9]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads