பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம்map
Remove ads

பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Batang Melaka Railway Station; மலாய்: Stesen KTMB Batang Melaka) என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டம், பத்தாங் மலாக்கா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இதன் வடக்கில் நெகிரி செம்பிலான்; கிழக்கில் ஜொகூர் மாநிலங்கள் உள்ளன. பத்தாங் மலாக்கா நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், பத்தாங் மலாக்கா நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.

விரைவான உண்மைகள் பத்தாங் மலாக்கா, பொது தகவல்கள் ...

மலாக்கா மாநிலத்தில் உள்ள இரண்டு தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்; மற்றொன்று புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம். இவை இரண்டும்தான் மலாக்கா மாநிலத்திற்கு சேவை செய்யும் நிலையங்கள் ஆகும்.

Remove ads

பொது

சிரம்பான்-கிம்மாஸ் மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு புதிய நிலையம் கட்டப்பட்டது;[1] மற்றும் 7 பிப்ரவரி 2014 அன்று செயல்படத் தொடங்கியது. மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[2]

பழைய பத்தாங் மலாக்கா நிலையம் மே 2012-இல் மூடப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.[3] இந்த நிலையம் 2015 முதல் 2021 வரை கேடிஎம் இண்டர்சிட்டி சேவையின் தென் மண்டல விரைவுத் தொடருந்து (Ekspres Selatan) துணைச் சேவைகளுக்கான நிறுத்தமாக இருந்தது.

தென் மண்டல விரைவுத் தொடருந்து துணைச்சேவை

10 அக்டோபர் 2015 மற்றும் சூன் 2016-க்கு இடையில், மலாயா தொடருந்து நிறுவனம், இந்த நிலையத்தின் வழியாக சிரம்பான் வழித்தடத்தின் கீழ் கொமுட்டர் தொடருந்துகளை இயக்கி வந்தது. சிரம்பான் மற்றும் கிம்மாஸ் நகரங்களுக்கு இடையே தென் மண்டல விரைவுத் தொடருந்து துணைச்சேவைக்கான நிறுத்தமாகவும் இந்த நிலையம் விளங்கியது.

சூன் 2016-க்குப் பின்னர், தென் மண்டல விரைவுத் தொடருந்து துணைச்சேவை புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரை குறைக்கப்பட்டு, இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டது.[4]

Remove ads

சேவைகள்

கேடிஎம் இடிஎஸ்

மேற்சான்றுகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads