பத்மாவதி காவியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்மாவதி காவியம், 1540ல் அவதி இராச்சியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜாயசி என்பவர் அவதி மொழியில் எழுதினார்.[1][2] இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[3]
காவியத்தின் சுருக்கம்

13ஆம் நூற்றாண்டில் மேவார் நாட்டு ராசபுத்திர மன்னர் ரத்தன் சிங், சித்தோர்கர் நாட்டின் இளவரசியான பத்மாவதியை திருமணம் செய்து கொள்கிறான்.
அதே காலகட்டத்தில், தில்லி சுல்தானகத்தில் கில்ஜி வம்சத்தை நிறுவிய ஜலாலுதீன் கில்ஜியை கொலைசெய்துவிட்டு, தானே தில்லி சுல்தானாகிறான் அலாவுதீன் கில்ஜி. இந்நிலையில் மேவார் மன்னர் ரத்தன் சிங்கால், ஒரு தவறுக்காக நாடுகடத்தப்பட்ட ராஜகுரு ராகவ் சேத்தன், பழிவாங்கும் எண்ணத்தில் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்து பத்மாவதியின் அழகைப் பற்றிச் சொல்கிறான்.
இதனால், மேவார் மீது படையெடுத்த அலாவுதீன் கில்ஜி, பத்மாவதியின் கணவரும், மேவார் நாட்டு மன்னருமான ரத்தன் சிங்கைச் சிறைப்பிடித்து தில்லி செல்கிறான். பின்னர் பத்மாவதி தில்லி சென்று சூழ்ச்சியால் ரத்தன்சிங்கை மீட்டுவருகிறாள்.
ஒரு முறை ரத்தன் சிங் மேவாரில் இல்லாத நேரத்தில் பத்மாவதியைக் கைப்பற்றி கட்டாயத் திருமணம் செய்ய விரும்புகிறான் கும்பனேரின் அரசன் தேவ்பால். இதனைக் கேள்விப்பட்ட ரத்தன் சிங், தேவ்பாலுடன் மல்யுத்தத்தில் ஈடுபடுகிறான். மல்யுத்தத்தில் இருவருமே மடிகிறார்கள். எனவே பத்மாவதி ரத்தன் சிங்கின் சிதையில் உடன்கட்டை ஏறி மடிகிறாள். இச்செய்தியறியாத அலாவுதின் கில்ஜி, பத்மாவதியை அடையும் நோக்கத்தோடு மீண்டும் மேவார் மீது படையெடுக்கிறான்.
அலாவுதீன் கில்ஜியின் படைகளுடன், ராஜபுத்திரப் படைகள் போரிட்டுக்கொண்டிருக்கும்போது, ராஜபுத்திரப் பெண்கள் சித்தூர் கோட்டையில் கூட்டாக தீயில் விழுந்து மடிகிறார்கள். அலாவுதீன் கில்ஜி போரில் வென்றாலும், தான் நினைத்தது நடக்காமல் போகிறது என்பதே பத்மாவதி காவியத்தின் கதை.
Remove ads
மரபுரிமை பேறுகள்
இக்காவியத்தை அடிப்படையாகக் கொண்டு பத்மாவத் என்ற பெயரில் திரைப்படம் வெளியாயிற்று.[4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads