பத்மா சுப்ரமணியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்மா சுப்ரமணியம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை) தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்.[1]
Remove ads
குடும்பம்
இவரது தந்தை கே. சுப்பிரமணியம், தாய் எஸ். டி. சுப்புலட்சுமி, சகோதரர் எஸ் வி இரமணன் ஆகியோர் தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள். பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார்.
கல்வி
பத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1983[2]
- இசைப்பேரறிஞர் விருது, 1994. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
- பத்மசிறீ
- பத்ம பூஷன், 2003
- கலைமாமணி விருது - தமிழக அரசிடமிருந்து
- காளிதாஸ் சம்மன் விருது (1990 -1991)
- நாத பிரம்மம் - நாரத கான சபா, சென்னை.
- பாரத சஸ்த்ர ரக்சாமணி
- நேரு விருது (1983) - ஒருங்கிணைந்த இரஷ்யா அரசு
- புகுகா ஆசிய கலாச்சாரப் பரிசு (Fukuoka Asian Cultural Prize) - ஜப்பான், ஆசியாவில் மேம்பாட்டிற்காகவும், ஒருங்கிணைப்பிற்காகவும் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக.
- கம்பன் புகழ் விருது, 2011 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை
- நிசகாந்தி புரஸ்காரம், 2015[4]
மேற்கோள்கள்
பிற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads