பந்தயம் (2008 திரைப்படம்)
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பந்தயம் என்பது 2008 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். ஏ. சந்திரசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நிதின் சத்யா மற்றும் சிந்து துலானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார் மற்றும் கணேஷ்கர் போன்றோர் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இப்படம் 19 செப்டம்பர் 2008 இல் வெளியானது.
Remove ads
நடிகர்கள்
- நிதின் சத்யா- சக்திவேல்
- சிந்து துலானி - துளசி
- பிரகாஷ் ராஜ் - மாசானம்
- ராதிகா சரத்குமார் - மாசானம் மனைவி
- கணேஷ்கர் - கணேஷ்
- வடிவேல் கணேஷ் -
- ரஜினி முருகன் - மணி
- லாவன்யா-
- விமல்
விமர்சனங்கள்
பிலிமிபீட் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "நல்ல நடிகர் எனப் பெயர் வாங்கிக் கொண்டிருந்த தருணத்தில் நிதின் சத்யாவுக்கு சோதனையாக இப்படியொரு படம். அவருடைய 'ஸ்கிரீன் பிரசன்ஸ்' ரசிக்கும் இல்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். எந்தப் பிரபல நடிகரெல்லாம் கால்ஷீட் கொடுக்கவில்லையோ, அவர்களை துணை நடிகர்களை விட்டு இமிடேட் செய்ய வைத்திருக்கிறாரோ இயக்குநர் என்று எண்ணத் தோன்றுகிறது, வடிவேலு கெட்டப்பில் ஒருவரை படம் முழுக்க அலையவிட்டிருப்பதைப் பார்க்கும்போது. இதற்கு எம்ஜிஆர், ரஜினியும் தப்பவில்லை!" என்று எழுதினர்.[2]
வெப்துனியா வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "பிரகாஷ்ராஜின் வில்லத்தனம்தான் படத்தின் ஹீரோ. தொடர்ந்து குழந்த என்று மிரட்டும் போது அதுவும் சலித்து விடுகிறது. நிதின் சத்யா தனி ஹீரோவாக நடித்த முதல் படம் என்பதை தாண்டி சொல்ல எதுவும் இல்லை. பொத்தல் விழுந்த திரைக்கதையும், புராதன நெடியடிக்கும் கதையும் பந்தயத்தை பரிதாபத்துக்குரியதாக மாற்றுகின்றன. பந்தயம் - கமர்ஷியல் கட்டவண்டி.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads