வி. வி. கிரியேசன்ஸ்

தமிழ் திரைப்பட தயாரிப்பு நினுவனம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வி. வி. கிரியேஷன்ஸ் (V. V. Creations) என்பது ஒரு தமிழ்த் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதன் உரிமையாளர் எஸ். ஏ. சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...

வரலாறு

வி. வி. கிரியேஷன்ஸ் என்ற பெயரானது சோபா சந்திர சேகரின் மகன் விஜய் மற்றும் அவரது மறைந்த சகோதரி வித்யா ஆகியோரின் பெயரில் உள்ள முதல் எழுத்தைக் கொண்டு இடப்பட்டது. வி. வி. கிரியேஷன்ஸ் 1984 ஆம் ஆண்டில் விசயகாந்து மற்றும் சரிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய வீட்டுக்கு ஒரு கண்ணகி படத்தை தயாரித்தது. இந்த தயாரிப்பு நிறுவனம் பின்னர் விஜயகாந்த் நடித்த மேலும் ஐந்து படங்களை தயாரிக்க, எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். 1991 ஆம் ஆண்டில், ஷோபா சந்திரசேகர் இயக்கிய நண்பர்கள் படத்தையும் தயாரித்தது. இந்த படம் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது.[2] நண்பர்களின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து ஷோபா சந்திரசேகரின் இயக்கத்தில் இன்னிசை மழை படத்தை இந்நிறுவனத்தின் சார்பில் தயாரித்தனர்.[3] 1992 ஆம் ஆண்டின் இறுதியில், எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் தங்கள் மகன் விஜயை நாயகனாக அறிமுகப்படுத்திய நாளைய தீர்ப்பு படத்தைத் தயாரித்தனர். பின்னர் இவர்கள் நெஞ்சினிலே மற்றும் பந்தயம் ஆகிய படங்களை தயாரித்தனர்.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads