பன்சடா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பன்சடா இராச்சியம் (Bansda State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் தெற்கு குஜராத் பகுதியில் உள்ள நவ்சாரி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பன்சடா இராச்சியம் 557 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 39,256 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

Remove ads
வரலாறு
1780-ஆம் ஆண்டில் பன்சடா இராச்சியத்தை இராஜபுத்திர குல சோலாங்கி வம்சத்தின் இரண்டாம் வீரசிம்மன் நிறுவினார். 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பன்சடா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.
இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பன்சடா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது.[1] 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பன்சடா இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
பன்சடா இராச்சியத்தின் ஆட்சியாளர்களை பிரித்தானிய இந்தியா அரசு, மகாராஜா சாகிப் என்ற பட்டத்துடன் அழைத்தனர்.[2]
- 1780 - 1789 இரண்டாம் வீரசிம்மன் (இறப்பு. 1789)
- 1789 - 1793 நாகர்சிம்மன் (இறப்பு. 1793)
- 1793 - 1815 ராய்சிம்மன் (இறப்பு. 1815)
- 1815 - 27 அக்டோபர் 1828 உதய்சிம்மன் (இறப்பு. 1828)
- 1828 - 16 சூன் 1861 ஹமிர்சிம்மன் (பிறப்பு. 1826? - இறப்பு. 1861)
- 1861 - 13 பிப்ரவரி 1876 இரண்டாம் குலாப்சிம்மன் (பிறப்பு. 1838 - இறப்பு. 1876)
- 6 மார்ச் 1876 – 21 செப்டம் 1911 பிரதாப்சிம்மன் குலாப்சிம்மன் (பிறப்பு. 1863 - இறப்பு. 1911)
- 21 செப்டம்பர் 1911 – 15 ஆகஸ்டு 1947 இந்திரசிம்மன் பிரதாப்சிம்மன் (பிறப்பு. 1888 - . 1951)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads