பயசுவினி

இந்தியாவில் ஓடும் ஓர் ஆறு From Wikipedia, the free encyclopedia

பயசுவினி
Remove ads

பயசுவினி (Payaswini) என்பது இந்தியாவின் கேரள மாநிலமான காசர்கோடு மாவட்டத்தில் பாயும் ஒரு மிகப்பெரிய ஆறாகும். இந்த ஆறு சந்திரகிரி என்ற பெயரிலும் அறியப்படுகிறது. மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் பெயரிடப்பட்டது. சரவணபெலகுளாவிற்கு செல்லும் வழியில் ஆற்றின் வழியே சென்றதாக கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சந்திரகிரி கோட்டை இங்கு அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் சந்திரகிரி ஆறு, பெயர்க்காரணம் ...

கி.பி பதினான்காம் நூற்றாண்டு முதல் கேரளாவின் துளுநாடு மற்றும் மலையாள பகுதிகளுக்கு இடையிலான பாரம்பரிய எல்லையாக இந்த ஆறு கருதப்படுகிறது; அதற்கு முன்பு இந்த எல்லை கும்பலாவுக்கு வடக்கே இருந்தது. இந்த ஆறு கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தின் பாதுகாக்கப்பட்ட காட்டில் உள்ள பட்டி காட் மலைகளில் உருவாகிறது. இது சல்லியா, ஜல்சூர், பாரப்பா, செர்கலா போன்ற பல நகரங்கள் வழியாகப் பாய்ந்து கடைசியில் காசர்கோடு நகரத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. இது உள்ளூர் மற்றும் விவசாய நோக்கங்களுக்கான முக்கிய நீர் ஆதாரமாகும்.

Remove ads

துணை ஆறுகள்

  • குதம்பூர் ஆற்றிலிருந்து கர்நாடகாவின் தலைக்காவிரி மலையில் உருவாகிறது. இது கரிகே, பனதூர், பாலந்தோடு, பூக்காயம், கோட்டோடி, உதயபுரம் போன்ற ஊர்கள் வழியாகப் பாய்ந்து இறுதியாக சந்திரகிரி ஆற்றில் இணைகிறது.
  • இந்த நதி பூக்காயம், மலக்கல்லு, பீம்பும்கல் போன்ற பகுதிகளில் பூக்காயம் நதி என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads