குடகு மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

குடகு மாவட்டம்map
Remove ads

குடகு மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் மடிகேரி. குடகை ஆங்கிலத்தில் கூர்க் என்று அழைப்பார்கள். 4,100 கிமீ2 பரப்புடைய இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் மொழிகள் ...
Thumb
குடகு எனும் கூர்க் பகுதியின் வரைபடம், 1913

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு முகத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் முதன்மை ஆறு காவிரி ஆகும். காவிரி இம்மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. காவிரியும் அதன் துணை ஆறுகளும் இம்மாவட்டத்தை வளப்படுத்துகின்றன.

குடகு இராச்சியம் தனி அரசாக இருந்து வந்தது. 1834 இல் ஆங்கிலேயர்கள் குடகை தங்கள் ஆட்சியில் இணைத்துக்கொண்டார்கள். 1956 மாநிலங்களை சீர் செய்யும் போது குடகு கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக சேர்த்து கொள்ளப்பட்டது.

Remove ads

மாவாட்ட நிர்வாகம்

குடகு மாவட்டம் 5 வருவாய் வட்டங்களையும், 4 நகராட்சிகளையும், 5 தாலுகா பஞ்சாயததுகளையும், 104 கிராம ஊராட்சிகளையும், 529 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]

  1. மடிகேரி வருவாய் வட்டம்
  2. சோம்வார் வருவாய் வட்டம்
  3. விராஜ்பேட் வருவாய் வட்டம்
  4. குஷால்கர் வருவாய் வட்டம்
  5. பொன்னம்பேட் வருவாய் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, குடகு மாவட்டத்தின் மக்கள் தொகை 554,519 ஆகும். அதில் 274,608 ஆண்கள் மற்றும் 279,911 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1019 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.61 %ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 80.97 %, இசுலாமியர் 15.74 %, கிறித்தவர்கள் 3.09 % மற்றும் பிறர் 0.21% ஆக உள்ளனர்.[2]

வெளியிணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads