கால்நடை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கால்நடைகள் (livestock) என்பவை வேளாண்தொழில் சூழலில் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் ஆகும். கால்நடைகள் அவற்றின் உழைப்புக்காகவும் இறைச்சி, முட்டை, பால், முடி, தோல், கம்பளி போன்ற பொருட்களுக்காகவும் பயன்படுகின்றன. சிலவேளைகளில் இவை இறைச்சிக்காக மட்டுமோ அல்லது பண்ணை விலங்குகளாக மட்டுமோ பயன்படுவதுண்டு.[1] அமெரிக்காவில் குதிரைகள் கால்நடைகளாகக் கருதப்படுகின்றன.[2] பலவகை கால்நடைகள் அவற்றின் சிவப்பு இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. மீனும் கோழியும் இவ்வகைபாட்டில் அடங்குவதில்லை.[3]
வேட்டையாடல்-உணவுதிரட்டல் வாழ்க்கைமுறையில் இருந்து வேளாண்மைசார் வாழ்க்கைமுறைக்கு மாறியபோது அனைத்து தொல்பண்பாடுகளிலும் வழக்கில் வந்த கால்நடைகளை வளர்த்தல், பேணுதல், கொன்று இறைச்சியாகப் பயன்படுத்தல் ஆகிய செயல்முறைகளின் கூட்டுத் தொழில் கால்நடை வளர்ப்பு எனப்பட்டது. இது வேளாண்மையின் துணைத்தொழிலாகி விட்டது. கால்நடை வளர்ப்பு பண்பாட்டுக்குப் பண்பாடு மாறுவதோடு காலத்துக்குக் காலமும் மாறும். பல்வேறு குமுகங்களில் இது தனிச்சிறப்பான பண்பாட்டு, பொருளியல் பாத்திரத்தை வகிக்கிறது.
இப்போது கால்நடைப் பண்ணை பெரிதும் "செறிநிலை விலங்குப் பண்ணை"யாக உருமாறிவிட்டது. சிலவேளைகளில் புதுவடிவம் "தொழிலகப் பண்ணை" எனவும் அழைக்கப்படுகிறது ; அமெரிக்காவில் 99% க்கும் மேலாக கால்நடைகள் இம்முறையில்தான் வளர்க்கப்படுகின்றன.[4] செறிநிலை விலங்குப் பண்ணை பல்வகை வணிக வெளியீடுகளை கூட்டுகிறது; ஆனால், விலங்குநலம், சுற்றுச்சூழல் தாக்கம், மக்கள் நலவாழ்வு ஆகியவற்றின்பால் எதிர்மறை விளைவுகளைச் செலுத்துகிறது.[5] இந்த எதிர்மறை விளைவுகளாலும் ஒட்டுமொத்தத் திறமை குறைவதாலும், 2030 கால அளவில் சில நாடுகளின் சிலவகைக் கால்நடைகளின் எண்ணிக்கை சரிவடையும் என சில புள்ளிவிவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.[6][7]
Remove ads
சொற்பிறப்பியல்

கால்நடை எனும் சொல் முதலில் 1650 களுக்கும் 1660 களுக்கும் இடையில் பயனுக்கு வந்தது. கால்நடை என்பது கால், நடை ஆகிய சொற்களி ன் கூட்டுச்சொல்லாகும்.[8] இன்று ஆடுமாடுகள் அசைபோடும் விலங்குகளாக அமைய, கால்நடைகள் அனைத்து வளர்ப்பு விலங்குகளையும் குறிக்கிறது.[9]
ஐக்கிய அமெரிக்காவின் கூட்டுக் குடியரசு சட்டம் இச்சொல்லைக் குறிப்பிட்ட திட்டத்தில் வேளாண்பொருள்களின் ஆக்கத்துக்கு பயன்படுமா இல்லையா என்பதைப் பொறுத்தே வரையறுக்கிறது. எடுத்துகாட்டாக, 1999 ஆண்டைய கட்டாயக் கால்நடை அறிவிப்புச் சட்டம் (P.L. 106-78, தலைப்பு IX) அசைபோடும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை ம்ட்டும் கால்நடைகளாக வரையறுக்கிறது. ஆனால், 1988 ஆம் ஆண்டைய சட்டம் ஆடுமாடுகள், செம்மறி, வெள்ளாடு,பன்றி, கோழி, உணவுக்கும் உணவு தயாரிக்கவும் பயன்படும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றைக் கால்நடைகளாக வரையறுக்கிறது.[10]
இறந்த கால்நடை கொல்லும் முன்பே நோயால் இறந்த கால்நடைகளைக் குறிக்கிறது. கனடா போன்ற சில நாடுகளின் சட்டங்கள் இறந்த கால்நடைகளை உணவாகப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன.[11]
Remove ads
வரலாறு
வேட்டையாடல்-உணவுதிரட்டல் வாழ்க்கைமுறையில் இருந்து வேளாண்மைசார் வாழ்க்கைமுறைக்கு மாறியபோது கால்நடைகள் வழக்கில் வந்துவிட்டன.. கால்நடைகளை வளர்த்தல், பேணுதல், கொன்று இறைச்சியாகப் பயன்படுத்தல் ஆகிய செயல்முறைகளின் கூட்டுத் தொழில் கால்நடை வளர்ப்பு எனப்பட்டது. மாந்தர் கால்நடை வளர்ப்பையும் வாழ்நிலைமைகளையும் கட்டுபடுத்த கற்றதுமே அவை வீட்டுப் பயன்பாட்டிலும் பரவலாகின. மேலும் அவற்றின் கூட்டு நடத்தையும் வாழ்க்கைமுறையும் உடல்கூ றுகளும் பெரிதும் மாற்றமடைந்தன. பல தற்கால கால்நடைகள் காட்டில் வாழத் தகுதியற்றனவாகி விட்டன.
முதல் வீட்டு விலங்கு நாய்தான். நாய் 15,000 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவிலும் சேய்மைக் கிழக்குப் பகுதிகளிலும் வீட்டு நாய்கள் காணப்பட்டுள்ளன.[12] வெள்ளாடுகளும் செம்மறிகளும் தென்மேற்கு ஆசியாவில் 11,000 ஆண்டுகளுக்கும் 5,000 ஆண்டுகளுக்கும் இடையே விட்டு விலங்குகளான.[13] கி.மு 8,500 கால அளவில் பன்றிகள் அண்மைக் கிழக்குப் பகுதிகளில் வீட்டு விலங்குகளாகின[14] சீனாவில் கி.மு 6,000 அளவில் வீட்டுப் பன்றிகள் உருவாகியுள்ளன.[15] கி.மு 4,000 ஆண்டளவில் குதிரைகள் வீட்டு விலங்குகளாகின.[16] மாடுகள் 10,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வீட்டு விலங்குகளாகிவிட்டன.[17] கி.மு 7,000 ஆண்டளவில் கோழிகளும் பிற பறவைகளும் வீட்டில் உணவாகப் பயன்படத் தொடங்கிவிட்டன.[18]
Remove ads
வகைகள்
"கால்நடை" எனும் சொல்லைக் குறுகலான பொருளிலும் அகல்விரிவான பொருளிலும் வரையறுக்கலாம். அகல்விரிவான பொருளில் வணிகப் பயன்பாட்டுக்கு மக்கள் வளர்க்கும் எந்தவொரு விலங்கையும் கால்நடை குறிக்கும்.


மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads