காடைக்கண்ணி

From Wikipedia, the free encyclopedia

காடைக்கண்ணி
Remove ads

காடைக்கண்ணி (oat) (அவினா சட்டைவா-Avena sativa) என்பது கூலப் பயிராகும். இது மாந்தருக்குக் கூழாகவோ கஞ்சியாகவோ பயன்பட்டாலும் இதன் முதன்மையான பயன் கால்நடைகளுக்கான தீனியாகவே அமைகிறது. இது ஊட்டச் சத்து மிக்க குருதிக்கொழுப்பு குறைவான தொடர்ந்து உண்னத்தக்க உணவாகும்.[1]

விரைவான உண்மைகள் காடைக்கண்ணி, உயிரியல் வகைப்பாடு ...

கோதுமையில் உள்ள கிளியாடினை ஒத்த காடைக்கண்ணியின் உட்கூறான அவெனின் குறிப்பிட்ட சிலருக்கு உடற்குழிநோயை உருவாக்க வல்லதாகும்.[2][3] மேலும் ,இதில் மாப்பிசின் உள்ள மற்ற கூலங்கள் விரவியே கிடைக்கிறது; குறிப்பாக கோதுமையும் பார்லியும் கலந்தே கிடைக்கிறது.[3][4][5]

Remove ads

தோற்றம்

அ. சட்டைவா, அதன் மிக நெருக்கமான சிறுபயிரான அ. பைசாந்தினா ஆகிய இரண்டின் அண்மிய மூதாதைப் பயிராகப் பல்குறுமவக/ஆறுகுறுமவகக் காட்டுப் பயிரான அ. இசுடெரிலிசு அமைகிறது. இதன் முந்தைய வடிவங்கள் நடுவண் கிழக்குப் பகுதியின் செம்பிறையில் தோன்றி வளர்ந்துள்ளன என்பதை மரபியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், காடைக்கண்ணிப் பயிர் மிகப் பிந்தைய காலத்தில், அதாவது செம்பிறைக்கு நெடுந்தொலைவில் அமைந்த ஐரோப்பாவில், அதுவும் பின்னதன் வெண்கலக் காலத்திலேயே தோன்றியுள்ளது. காடைக்கண்ணியும் புல்லரிசியும் கோதுமை, பார்லி ஆகிய முதன்மைப் பயிர்களின் களைப்பயிர்களில் இருந்து தோன்றிய இரண்டாம் தரப்பயிர்களாகவே கருதப்படுகின்றன. இக்கூலங்கள் மேற்காக குளிர்ந்த ஈரமான பகுதிகளில் பரவியபோது, அவற்றின் காடைக்கண்ணிக் களைப்பயிர் மிகவும் விருமபத் தக்கதாக மாறி பயிரிடப் பட்டிருக்கலாம்.[6]

Remove ads

பயிரீடு

மேலதிகத் தகவல்கள் காடைக்கண்ணி விளைச்சல் - 2014 மில்லியன் டன்களில் ...

காடைக்கண்ணிப் பயிர் மித வெப்ப மன்டலப் பகுதிகளில் நன்றாக விளைகிறது. இதற்குக் குறைவான கோடைக்கால வெப்பமே போதும். கோதுமை, பார்லி, புல்லரிசியை விட நன்றாக மழையைத் தாங்குதிறம் பெற்றுள்ளது. எனவே, இது வடகிழக்கு ஐரோப்பா, ஐசுலாந்து போன்ற குளிர்ந்த ஈரப்பத கோடை நிலவும் பகுதிகளில் நன்றாகப் பயிராகும். இது ஆண்டு முழுவதும் விளையக்கூடிய பயிராகும். இதை, இலையுதிர்காலத்தில் நட்டு கோடைக்காலத்தில் அறுவடை செய்யலாம் அல்லது இளவேனிற்காலத்தில் நட்டு முன் இலையுதிர்காலத்தில் அறுவடை செய்யலாம்.

Thumb
உலகளாவிய காடைக்கண்ணி விளைச்சல்

பயிர்விளைச்சல்

உலகளாவிய 2014 ஆம் ஆன்டின் காடைக்கண்னி பயிர்விளைச்சல் 22.7 மில்லியன் டன்களாகும். இதில் உருசியா முன்னிலையில் அமைந்து 5.3 மில்லியன் டன்கள் விளைவித்துள்ளது. இது உலக மொத்த விளைச்சலில் 23% ஆகும் (பட்டியல்).தைதற்கு அடுத்து பேரள்வில் காடைக்கண்ணிப் பயிர் விளைவிக்கும் நாடுகள்கனடாவும் போலந்தும் ஆத்திரேலியாவும் ஆகும்.[7]

Remove ads

பயன்பாடுகள்

Thumb
காடைக்கண்னியின் சிறுபூக்கள்)

காடைக்கண்ணி உணவுகளில் பலவகைகளில் பயன்படுகிறது; மிகப் பொதுவாக, சுருளடைகளாகவோ குறுணையாக்கிக் கஞ்சியாகவோ/கூழாகவோ பொடியாக்கி மாவாகவோ உணவில் பயன்படுகிறது. காடைக்கண்ணி கஞ்சியாக மட்டுமன்றி, மெத்தப்பம் (oatcake),உரொட்டி (bread). ஈரட்டிகள் (cookies போன்ற அடுமனைப் பலகாரங்களாகவும் சில குளிர்வகைக் கூலங்களில் உட்கூற்றுப் பொருளாகவும் பயன்படுகிறது.

காடைக்கண்ணி தொடர்பான நோக்கு அல்லது மனப்பான்மை தொடர்ந்து மாறிக்கொன்டே வந்துள்ளது. முதலில் இது பிரித்தானியாவில் வெதுப்பி செய்யப் பயன்பட்டுள்ளது; இங்கு முதல் காடைக்கண்னி உரொட்டித் தொழிலகம் 1899 இல் அமைக்கப்பட்டது. இசுகாட்லாந்தில், இது முதன்மை உணவாக உள்ளதால் முன்பு போலவே இன்றும் உரொட்டித் தொழிலகங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

Thumb
யவுமியான் எனும் நீராவியால் அடுதல் செய்த காடைக்கண்ணி குழலுணவும் சுருளடைகளும்

சீனாவில், குறிப்பாக மேற்கு மங்கோலிய உட்பகுதியிலும் சாங்சி மாநிலத்திலும், யவுமியான் எனப்படும் அவினா நூதா (Avena nuda) என்ற காடைக்கண்ணி வகை மாவில் குழலுணவுகளும் சுருளடைகளும் செய்து முதன்மை உணவாக உண்ணப்படுகின்றன.[சான்று தேவை]

ஊட்டமும் நலமும்

ஊட்டச் சத்து விவரம்

விரைவான உண்மைகள் உணவாற்றல், காடைக்கண்ணி பீட்டா குளூக்கான் ...

பல ஊட்டச்சத்துகளை காடைக்கண்ணி செறிவாகப் பெற்றுள்ளதால் இது பொதுவாக நலவாழ்வுதரும் நல்ல உணவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது (பட்டியல்). இதன் 100 கிராம் உணவு 389 கலோரிகளை தருகிறது; 20% அன்றாடத் தேவைப் புரதத்தையும் 34% அன்றாடத் தேவை நாரிழையையும் 44% அன்றாடத் தேவை B உயிர்ச்சத்துகளையும் பல உணவுசார் கனிமங்களையும் குறிப்பாக மங்கனீசையும் (233 % அ.தே) தருகிறது (பட்டியல்).இதில் 66% கரிமநீரகிகளும் 11% நாரிழையும் 4% பீட்டா குளூக்கானும், 7% கொழுப்பும் 17% புரதமும் உள்ளன (பட்டியல்).

நிறுவப்பட்டுள்ள இதன் கொழுப்பைக் குறைக்கும் விளைவுகளால்,[1] நலவாழ்வுதரும் நல்ல உணவாக காடைக்கண்ணி ஏற்கப்பட்டுள்ளது.[8]

Thumb
உமியுடன் அமைந்த காடைக்கண்ணி கூல மணிகள்
Thumb
காடைக்கண்ணி அடிசில்

கரையும் நாரிழை

தீட்டப்படாத காடைக்கண்ணியின் மேல்புரையை நாளும் உண்டுவந்தால் சில வாரங்களிலேயே தாழடர்த்திக் கொழுமியக் கொழுப்பையும் (தீயவிளைவுக் கொழுப்பையும்) மொத்தக் கொழுப்பளவையும் குறைத்து இதயநோய் வரும்வாய்ப்பைக் குறைக்கிறது.[1][9]

காடைக்கண்ணியின் பீட்டா குளூக்கான் எனும் கரையும் நாரிழையினது கொழுப்பைக் குறைக்கும் திறம் நிறுவப்பட்டுள்ளது.[1]

கொழுப்பு

மக்காச்சோளத்துக்குப் பிறகு காடைக்கண்ணி, மற்ற எந்த கூலத்தையும் விட உயர்கொழுப்பு உள்ளடக்கத்தைப் பெற்றுள்ளது; சில காடைக்கண்ணிப் பயிர்கள் 10 % அளவுக்கும் மேல் கூடுதலாகவும் சில மக்காச்சோளப் பயிர்கள் 17 % அளவுக்கும் மேல் கூடுதலாகவும் கொழுப்பைப் பெற்றுள்ளன; கோதுமையிலும் மற்ற கூலங்களிலும் ஏறத்தாழ 2–3% அளவு கொழுப்பே அமைந்துள்ளது.[சான்று தேவை] The polar lipid content of oats (about 8–17% glycolipid and 10–20% phospholipid or a total of about 33%) is greater than that of other cereals, since much of the lipid fraction is contained within the endosperm.[சான்று தேவை]

புரதம்

அவெனாலின் எனும் குளோபுலின் அல்லது பருப்புவகைப் புரதம் 80% அளவுக்கு அமைந்துள்ள ஒரே கூலமணி காடைக்கண்னி மட்டுமே.[10] இது மாப்பிசின், சீன், புரொலாமின் போன்ற மற்ற கூலமணிப் புரதங்களைப் போலல்லாமல், நீர்த்த உப்புநீர்மத்திலேயே கரையும் திறம் பெற்றுள்ளது.றைதில் சிற்றளவில் கல்ந்துள்ள புரொலாமின் அவெனின் மட்டுமேயாகும்.

இதன் புரதம் தரத்தில் சோயாவின் புரதத்துக்குச் சமமானதாகும் சோயா புரதமோ இறைச்சி, பால், முட்டை ஆகியவற்றின் புரதத்துக்குச் சமனானதென உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.[11] உமிநீக்கிய காடைக்கண்ணி அரிசியின் புரத உள்ளடக்கம், மற்ற கூலங்களைவிட 12% முதல் 24%வரை கூடுதலாக உள்ளது.

உடற்குழி நோய்கள்

உலகின் வளர்ந்த நாடுகளில் 1% மக்கள்தொகை மாப்பிசின் ஒவ்வாமையால் உடற்குழி நோய்கட்கு ஆட்படுகின்றனர்.[12] மாப்பிசின் (Gluten) கோதுமை, பார்லி, காடைக்கண்ணி, புல்லரிசி ஆகியவற்றிலும் ஒத்த இனவகைக் கூலமணிகளிலும் அமைந்துள்ளது[2][12] மாப்பிசினில் புரொலாமின்கள் உயரளவில் அமைந்த நூற்றுக்கும் மேலான புரதங்கள் உள்ளன.[13]

அவெனின் எனும் காடைக்கண்ணி புரொலாமின்களும் கோதுமையில் உள்ள கிளியாடின் எனும் புரொலாமின்களும் புல்லரிசியில் உள்ள செகாலின் எனும் புரொலாமின்களும் பார்லியில் உள்ள கோர்டீன் எனும் புரொலாமின்களும் ஒட்டுமொத்தமாக மாப்பிசின் என அழைக்கப்படுகின்றன.[2]

Remove ads

வேளாண்மை

Thumb
நாயிரே த்தேபினால், தொல்பழம் காடைக்கண்ணி வகை.
Thumb
காடைக்கண்ணி அறுவடை, சுசுகாட்சேவான் பகுதி

மண் பண்படுத்தப்பட்டதும், குளிர்பகுதிகளில் காடைக்கண்ணி இளவேனிற் காலத்தில் விதைக்கப்படுகிறது. முன்பாக விதைத்தல் நல்ல கணுபடி பெற வழிவகுக்கும். ஏனெனில், கோடை வெப்பத்தில் காடைக்கண்னிப் பயிர் உறக்கத்தில் ஆழ வாய்ப்புள்ளது. மிதவெப்பப் பகுதிகளில், முது வேனிற் கலத்திலோ இலையுதிர்காலத் தொடக்கத்திலோ விதைக்கப்படுகிறயது. காடைக்கண்ணி குளிர்தாங்குதிறம் கொன்டுள்ளதால் பின்பனியாலோ, பனிப்பொழிவாலோ தக்கமேதும் அடையாது.

விதைப்பு வீதம்

வழக்கமாக, ஓர் எக்டேருக்கு ஏறத்தாழ 125 முதல் 175 கிகி விதைகள் அல்லது ஓர் ஏக்கருக்கு 2.75 முதல் 3.25 பெருங்கூடை விதைகள் தூவியோ துளையிட்டோ விதைக்கப்படும்மூடுபயிராக பருப்புவகைகல் அமையும்போது குறைவான அளவு விதைகளே விதைக்கப்படும். வளமான மண்ணிலும் களையெடுப்பு மிகுந்த இடங்களிலும் உயர்விதைப்பு வீதம் பயன்படுத்தப்படும். தேவையற்ற உயர்விதைப்பு வீதம் பயிர்விளைய இடம்போதாமையால் கணுபடி குறைய வாய்ப்புள்ளது.

வீட்டில் பதப்படுத்தல்

உமிநீக்கிய காடைக்கண்ணியை வீட்டில் சிற்றளவில் எந்திர உருளைகளில் இட்டு குறுணையாகவோ மாவாகவோ பதப்படுத்தப்படும்.[14][15]

சமையல் முறை

  • அவிக்காமல் உரலில் இட்டுக் குத்தி அரிசியாக்கிச் சமையல் செய்யலாம்.
  • சிறிது நீர் சேர்த்து குழைத்து பானையில் போட்டு அவித்து பக்குவமாக இறக்கிக் காயப் போட்டு உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கிச் சமைத்து உண்ணலாம்.
  • காணப்பயிற்றுக் குழம்பும், புளி ஊற்றிய தோட்டத்திலுள்ள காய்கறிகளையும் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
Remove ads

பெயரீடு

இசுகாட்லாந்து ஆங்கிலத்தில் காடைக்கண்ணி வெறுமனே கூலம் என்றே அழைக்கப்படுகிறது.[16] (ஆங்கில மொழியிலும் முதன்மை உணவாகப் பயன்படும் களப்பகுதிகளில் கூலம் எனும் பொதுப்பெயரே வழங்குகிறது.[17] அமெரிக்க ஐக்கிய நாட்டில், இந்தியாவைப் பின்பற்றி, கூலம் எனும் பொதுச் சொல் மக்காச்சோளத்துக்கே வழங்குகிறது.)[17]

காடைக்கண்ணியின் வருங்காலம்

சிக்காகோ தொழில்வணிக வாரியத்தால் காடைக்கண்ணியின் எதிர்காலமும் வழங்கலும் கட்டுபடுத்தப்படுகிறது. அதன் விற்பனை வெளிய்யீடுகள் மார்ச்சு, மே, ஜூலை, செப்டம்பர், திசம்பர் மாதங்களில் அமைகிறது.[18]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads