பரானா (மாநிலம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரானா (Paraná போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [paɾaˈna]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் வடக்கே சாவோ பாவுலோ மாநிலமும், கிழக்கே அத்திலாந்திக்குப் பெருங்கடலும் தெற்கில் சான்டா கதரீனா மாநிலமும், அர்கெந்தீனா நாடும், மேற்கே மடோ குரோசோ டொ சுல் மாநிலமும் பரகுவைக் குடியரசும் அமைந்துள்ளன; பரனா ஆறு மேற்கு எல்லையை வரையறுக்கிறது. மகர ரேகை குறுக்கேச் செல்லும் பரானாவில் உலகின் சிறப்புமிக்க வெப்பமண்டலம் அணவிய ஊசியிலைக் காடுகள் உள்ளன. அர்கெந்தீனாவின் எல்லையிலுள்ள இக்ககுவசு தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரியக் களமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இங்குள்ள கதரசாசு டோ இக்குவசுவைக் காண ஆண்டுதோறும் 700,000 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பரகுவையின் எல்லையில் உலகின் மிகப் பெரிய அணைக்கட்டு, இட்டைப்பூ நீர் மின் நிலைய அணை, கட்டப்பட்டுள்ளது. போன்டா குரோசா நகருக்கு அருகிலுள்ள விலா வெல்கா அரசுப் பூங்காவில் மழையாலும் காற்றாலும் அரிக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ள இயற்கையான பாறை வடிவங்கள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. தலைநகர் குரிடிபேயின் வாழ்நிலைத் தரம் பிரேசிலின் சராசரியை விட உயர்ந்ததாக உள்ளது.
Remove ads
காட்சிக்கூடம்
- குரிடீபாவின் தாவரவியல் பூங்கா
- குரிடீபாவின் வரலாற்று மையம்
- பைக்கோ பரானா
- ஆசுகர் நீமெயர் வடிவமைத்த கலைக் காட்சியகம்
- இட்டைப்பு அணை
- விலா வெல்கா பாறை வடிவம்
- குரிடீபாவில் பேருந்து நிலையமொன்று
- பிரெயாதுபா கடற்கரை
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads