பலகணவர் மணம்

From Wikipedia, the free encyclopedia

பலகணவர் மணம்
Remove ads

பலகணவர் மணம் அல்லது "பல்கொழுநம்" (Polyandry) என்பது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் மணஉறவு கொண்டு வாழ்தல் ஆகும். இம்முறை திபெத், நேபாளம், பூட்டான் போன்ற இமயமலையை ஒட்டிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்திலும் தென்னிந்தியாவில் தோடர் இனத்திலும் இப்பழக்கம் காணப்படுகிறது.

Thumb
பாண்டவர்கள் திரௌபதி சிலை

சில சமூகங்களில் ஒரு பெண் ஒருவனை மணந்தால் அவனுக்கு மட்டுமன்றி அவனுடன் பிறந்தோர் அனைவருக்கும் மனைவியாகிறாள். நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடி மக்களிடையே இம்முறையே நிலவுகிறது.[1][2][3]

இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ள கண்டிச் சிங்களவர் திருமணச் சட்டத்தில் ஒரு பெண் குடும்பத்தில் மூத்தவனை முறைப்படி திருமணம் செய்தாலும் அவள் அவனது சகோதரர் அனைவருக்கும் மனைவியாகிறாள். எனினும் அவ்வாறான சகோதரர் எவர் மூலமேனும் அவளுக்குக் குழந்தை பிறக்குமிடத்து, அக்குழந்தை மூத்தவனுடையதாகவே கருதப்படும். ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் அக்குடும்பத்திலேயே தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

Remove ads

காரணங்கள்

பலகணவர் மணம் காணப்படும் இனங்களில் முற்காலத்தில் இருந்த குறைவான பெண்களின் எண்ணிக்கை இம்முறை தோன்றக் காரணமாயிருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads