பலாங்கீர் மாவட்டம்

ஒடிசாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பலாங்கீர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பலாங்கீர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டம் பல விழாக்களை, மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறது. சிதால் சாஸ்தி, நுகாய், பைஜியுண்டியா, பூஜியாண்டியா, சிவா ராத்ரி மேளா, படகந்தா ஜாத்ரா, ஷரபனா பூர்ணிமா ஆகியவை இங்கு கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்கள் ஆகும். இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சில நபர்களில், ஒடிசாவின் முன்னாள் முதல்வராக ஸ்ரீ ராஜேந்திர நாராயண் சிங் தியோ ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார். இந்த மாவட்டத்தின் பிற முக்கிய நபர்களாக, டாக்டர் சீனிவாஸ் உட்கட்டா (எழுத்தாளர்), எர் சாம் பிட்ரோடா (தொலைத்தொடர்பு விஞ்ஞானி), செல்வி காயத்ரி சரஃப் (எழுத்தாளர்), சுஷ்ரீ ஆனந்தினி டார்ஜி (விளையாட்டு நபர்) போன்றவர்களைச் சொல்லலாம்.

Remove ads

அமைவிடம்

இதன் தலைநகரான பாலாங்கிர் ஊரின் பெயரில் இம்மாவட்டத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் நவம்பர் 1, 1949 இல் உருவாக்கப்பட்டது. இது வடமேற்கில் காந்தமர்தன் மலையால் சூழப்பட்டுள்ளது. பல மலை ஓடைகள் இதன் வழியே கடந்து செல்கின்றன. பலங்கீர் என்ற பெயரானது, 16 ஆம் நூற்றாண்டில் ஆண்ட பாலங்கிரின் 19 வது ராஜா மற்றும் சம்பல்பூர் இராச்சியத்தின் நிறுவனர் பால்ராம் தியோ என்பவரைக் குறிக்கிறது. இவர் காலத்தில் கட்டப்பட்ட பலரம்கர் என்ற கோட்டையின் பெயரில் இருந்தும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பலங்கீர் மாவட்டத்தின் கிழக்கில், சுபர்நாபூர் மாவட்டம் உள்ளது. மேற்கே நுவாபா மாவட்டமும், தெற்கில் கலஹந்தி மாவட்டமும், வடக்கில் பர்கர் மாவட்டமும் உள்ளன. இந்த மாவட்டம் புவியியல் 20 டிகிரி 11’40 முதல் 21 டிகிரி 05’08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 82 டிகிரி 41’15 முதல் 83 டிகிரி 40’22 கிழக்கு தீர்க்கரேகை வரையிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 6575 சதுர கி.மீ. ஆகும். உள்ளன. இந்த மாவட்டம் புவியியல் 20 டிகிரி 11’40 முதல் 21 டிகிரி 05’08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 82 டிகிரி 41’15 முதல் 83 டிகிரி 40’22 கிழக்கு தீர்க்கரேகை வரையிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 6575 சதுர கி.மீ. ஆகும்.

Remove ads

மக்கள் பரவல்

பாலங்கீர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,48,997 ஆகும். மொத்த ஆண் மக்கள் தொகை 8,30,097 ஆகவும், பெண் மக்கள் தொகை 8,18,900 ஆகவும் உள்ளன. இம்மாவட்டத்தின் மொத்த தாழ்த்தப்பட்டவர் மக்கள் தொகை 2,94,777 மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மக்கள் தொகை 3,47,164 ஆகவும் உள்ளன. பலங்கிர் மாவட்டத்தில் 3 துணைப்பிரிவுகள், 14 தஹாசில்கள், 14 தொகுதிகள், 2 நகராட்சிகள், 3 என்ஏசிக்கள், 18 காவல் நிலையங்கள் மற்றும் 285 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. பாலங்கிர் மாவட்டத்தில்.அளவிடப்படும் குறைந்தபட்ச வெப்பநிலை 16.6 செல்சியசு ஆகவும், அதிகபட்சம் 48.7 செல்சியசாகவும் நிலவுகின்றன. ஆண்டில் 1215.6 மி.மீ சராசரி மழை பொழிகிறது. பாலங்கீர் மாவட்டத்தின் பொருளாதாரம் அடிப்படையில் விவசாயம் ஆகும். பாலங்கீர் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையும், அதன் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.[2] பாலங்கீர் மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 65.50 சதவீதம். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 77.08 சதவீதமும், பெண் கல்வியறிவு விகிதம் 53.77 சதவீதமும் ஆகும். பாலாங்கிர் மாவட்டத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை பொறியியல், கலை மற்றும் சமூக அறிவியல், சட்டம், வர்த்தகம், மருத்துவ அறிவியல், பத்திரிகை போன்ற துறைகளில் கல்விக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குகின்றன. ராஜேந்திர தன்னாட்சிக் கல்லூரி, பித்ய பூஷண் சமஸ்கிருத கல்லூரி, அரசு ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவம் மற்றும் மருத்துவமனை, பாலங்கீர் சட்டக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு பாலங்கீர் கல்லூரி, ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, பட்நகரின் ஜவஹர்லால் கல்லூரி, டி.ஏ. திதிலாகர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் (எஸ்ஐஎச்எம்) போன்றவை மாவட்டத்தின் முக்கியமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.

Remove ads

வேளாண்மை

பாலங்கீர் மாவட்டத்தில் காணப்படும் பிரதான மண் வகைகள் கருப்பு, சிவப்பு, கலப்பு சிவப்பு மற்றும் வண்டல் மண் ஆகும். 70 சதவீதத்திற்கும், அதிகமான மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது பயிரிடக்கூடிய பகுதி 3,45,650 ஹெக்டேர் ஆகும். இம்மாவட்டத்தின் முக்கிய பயிராக நெல் பயிரடப் படுகிறது. எநல்லானது மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பளவில், 61 சதவீதமாகும். இம்மாவட்டத்தில் பயிரிடப்படும் பிற முக்கியமான பயிர்கள், பயிர் பரப்பளவில் 14 சதவீதத்தில் பருப்பு வகைகளும், அதனைத் தொடர்ந்து எண்ணெய் விதைகள் 3 சதவீதத்திலும், நார் 4 சதவீதத்திலும், காய்கறி 2 சதவீதத்திலும், மற்ற உணவுப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை 14 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: அகல்பூர், பலாங்கீர், பங்கமுண்டா, பேல்படா, தேவ்காவ், கண்டாபாஞ்சி, கப்ராகோல், லோய்சிங்கா, மோரிபாகால், பாட்ணாகட், புயிந்தளா, சாயிந்தளா, டிட்டிலாகட், துசுரா ஆகியன. இந்த மாவட்டத்தி நிர்வாக வசதிக்காக, பதினான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: அகல்பூர், பலாங்கீர், பேல்படா, பங்கமுண்டா, தேவ்காவ், குட்வெள்ளா கப்ராகோல், லோயிசிங்கா, மோரிபாகால், பாட்ணாகட், புயிந்தளா, சாயிந்தளா, டிட்டிலாகட், துராய்கேளா

இந்த மாவட்டத்தில் பலாங்கீர் என்னும் ஊர், நகராட்சி நிலையை அடைந்துள்ளது.

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பலாங்கீர், லோயிசிங்கா, பாட்ணாகட், டிட்டிலாகட், கண்டாபாஞ்சி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் பலாங்கீர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

Remove ads

சுற்றுலா

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads