பல்லூடக பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பல்லூடக பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Multimedia; ஆங்கிலம்: Multimedia University; (MMU) என்பது மலேசியா, சைபர்ஜெயா மற்றும் மலாக்காவில் உள்ள ஒரு தனியார் ஆய்வுப் பல்கலைக்கழகம் ஆகும். 1997-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மலேசியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம்; மேலும் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களின் கூட்டணி (GLU) உறுப்பு அமைப்பாகவும் செயல்படுகிறது.[1]
1996-ஆம் ஆண்டில், மலேசிய அரசாங்கம் நாட்டின் உயர்கல்வித் துறையை தாராள மயமாக்குவதற்கும், மனித மூலதன மேம்பாட்டை உயர்த்தும் செயல்பாட்டில் தனியார்க் கல்வித் துறையை ஈடுபடுத்துவதற்கும் முயற்சிகளைத் தொடங்கியது.[2] இதன் விளைவாக, ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியை மலேசிய கல்வி அமைச்சு நாடியது.
அக்டோபர் 1996-இல், மலேசியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான சிறப்புத் தகுதியை டெலிகோம் மலேசியா பெற்றது. அந்த வகையில் மலாக்காவில் டெலிகாம் பலகலைக்கழகம் (Universiti Telekom) நிறுவப்பட்டது.
Remove ads
பொது
பல்லூடக பல்கலைக்கழகத்திற்கு இரண்டு முதன்மை வளாகங்கள் உள்ளன சைபர்ஜெயாவில் ஒரு பிரதான வளாகம்; மற்றும் மலாக்காவில் மற்றொரு வளாகமும் செயல்பாட்டில் உள்ளன. சைபர்ஜெயா வளாகத்தில், ஏழு துறைகள் உள்ளன; ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கல்வித் துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மலாக்கா வளாகத்தில் நான்கு துறைகளும் ஒரு கல்வி நிறுவனமும் உள்ளன. இரண்டு வளாகங்களின் உயர்க் கல்வித் திட்டங்களை பட்ட மேற்படிப்பு கல்விக் கழகம் (The Institute for Postgraduate Studies) (IPS) எனும் கல்வி அமைப்பு கண்காணிக்கிறது.[3]
Remove ads
சிறப்புத் தகுதிகள்
பல்லூடக பல்கலைக்கழகம், 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கணினி அறிவியல் மற்றும் மின் பொறியியல் துறையில் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் உலகளவில் சிறந்த 151-200 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தொடர்ந்து தரவரிசைப்படுத்தப்பட்டது. இந்தப் பலகலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் 92% பேர் இளங்கலை பட்டதாரிகள் ஆவார்கள்.
2020-ஆம் ஆண்டில், டைம்ஸ் உயர் கல்வி அமைப்பு (Times Higher Education (THE) World University Rankings) உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் பத்து மலேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பல்லூடக பல்கலைக்கழகம் (MMU) தரவரிசைப்படுத்தப்பட்டது.[4]
Remove ads
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

