பழங்கரை முன்தோன்றீசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொன் சோழீஸ்வரர் ஆலயம் என்றும் பழங்கரை முன்தோன்றீசுவரர் கோயில் என்றும் வழங்கப்படும் பழைமையான திருக்கோயில் திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி அருகில் அமைந்துள்ள சிவபெருமான் திருக்கோயில்.[1]
Remove ads
மரபு வரலாறு
ஆபத்து காத்த விநாயகர்
அக்னி மாநதி ஆறு அருகில் "ஆபத்து காத்த விநாயகர்" உள்ளார். வெள்ளம் ஏற்படும் ஆபத்தான காலகட்டங்களில் ஊரைக் காப்பாற்றியமைக்காக இவருக்கு காரணப்பெயராக ஆபத்து காத்த விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.[1](இந்த ஆறு இருந்த அடையாளம் மட்டுமே உண்டு)[2])
ஆங்கிலேய அதிகாரிக்கு அருளியமை
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊர் நிர்வாகத்திற்காக முகாமிட்டிருந்த ஆங்கிலேய உயரதிகாரியும் அவரது குழுவும் தங்கியிருந்த கூடாரங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. ஆபத்தான அச்சமயத்தில் இந்த விநாயகப்பெருமானைப் பார்த்து காப்பாற்ற வேண்டினார் அந்த உயரதிகாரி. ஆற்று நீர் விலகி வழிவிட்டதால் அவர்களும் தப்பினர். இந்த விநாயகர் மீது பக்தி கொண்ட அந்த ஆங்கிலேய உயரதிகாரி, அன்றுமுதல் இவரது பூஜை செலவிற்கு தினமும் இரண்டு ரூபாய் வழங்கச்செய்தார். (உத்தரவு எண்: 3136 B.P.G.O.No: 1625 தேதி: 25.11.1899. இன்றளவும் நூறு ஆண்டு கடந்த பின்னரும் இதே இரண்டு ரூபாய் இந்த விநாயகருக்குத் தமிழக அரசால் ஒதுக்கப்படுகின்றது)[1]
Remove ads
நித்ய கல்யாணப் பெருமாள்
இத்திருக்கோயில் உள்ளே ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை நித்ய கல்யாணப் பெருமாள் உள்ளார். [1]
திருக்கோயில் பற்றிய தொன்தகவல்கள்
கல்வெட்டுகள் மூலம், முன்பு ஊர் நிர்வாக சபை ஊரையும் திருக்கோயிலையும் பராமரித்து வந்ததும் திருக்கோயிலின் வளமும், மன்னர்கள் அளித்த நன்கொடை பற்றிய தகவல்களும் தெரிய வருகின்றன. [1]
பழங்கரையின் தகவல் தரும் கல்வெட்டுகள்
- வீரராஜேந்திர சோழர் கல்வெட்டுகள் மூன்று
- விக்கிரம சோழ மன்னர் கல்வெட்டு ஒன்று
- விஜயநகர் மன்னர் அச்சுதராயன் கல்வெட்டுகள் இரண்டு
பெயர்க்காரணம்
அனைத்துக்கும் முன்பே தோன்றிய இறைவனார் சிவபெருமான் என்பதைக்குறிக்கும் விதமாக முன்தோன்றீசுவரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. [1]
பேருந்து வசதி
அவிநாசியிலிருந்து பேருந்து வசதி உண்டு.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads