அவிநாசி

இது தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia

அவிநாசிmap
Remove ads

அவிநாசி (ஒலிப்பு) (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி வட்டம் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இங்கு, சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் பாடி, பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அவிநாசி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

அவிநாசி நகராட்சியிலிருந்து, திருப்பூர் 18 கி.மீ. மற்றும் கோயம்புத்தூர் 40 கி.மீ. தொலைவில் உள்ளன.

நகராட்சியின் அமைப்பு

11.65 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 7,443 வீடுகளும், 28,868 மக்கள்தொகையும் கொண்டது.[5]

வரலாறு

கொங்கு மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு சிவத்தலங்களில், அவிநாசி முதன்மையானது ஆகும். அவிநாசி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.2°N 77.28°E / 11.2; 77.28 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%; பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads