பவானிசாகர்
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
பவானிசாகர் (ஆங்கிலம்:Bhavanisagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு தமிழ்நாடு அரசு அலுவலர் பயிற்சி நிலையம் உள்ளது.[4] பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் காரணமாக இவ்வூர் இப்பெயர் பெற்றது.
Remove ads
அமைவிடம்
பவானிசாகர் பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து 86 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் சத்தியமங்கலம் 15 கி.மீ.; மேற்கில் மேட்டுப்பாளையம் 36 கி.மீ.; வடக்கில் தாளவாடி 45 கி.மீ.; தெற்கில் புஞ்சைப் புளியம்பட்டி 16 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
5.83 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,134 வீடுகளும், 7,710 மக்கள்தொகையும் கொண்டது.[6]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads